full screen background image

நடிகை கே.ஆர்.விஜயா இரண்டு வேடங்களில் நடிக்கும் ‘கோடீஸ்வரி’ 

நடிகை கே.ஆர்.விஜயா இரண்டு வேடங்களில் நடிக்கும் ‘கோடீஸ்வரி’ 

ஸ்ரீஆண்டாள் அம்பிகை கிரியேசன் பட நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கோடீஸ்வரி.’

இந்தப் படத்தில் பழம்பெரும் நடிகையான திருமதி கே.ஆர்.விஜயா இரட்டை வேடமேற்று நடிக்கிறார்.    நீண்ட வருடங்களுக்கு பிறகு இரட்டை வேடமேற்று நடிக்கவிருக்கிறார்.

படத்தில் இளம் நாயகனாக A.மோகன் அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாக ரிஸ்வான் அறிமுகமாகிறார். இவர் மாடர்ன் தியேட்டர்ஸில் பணி புரிந்த  எஸ்.ஏ.மஸ்தானின் வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகிகளாக அஷ்மா, சுப்ரஜா ஆகியோர் அறிமுகமாகிறார்கள்.

மேலும், கராத்தே ராஜா, டி.பி.கஜேந்திரன், நெல்லை சிவா, முத்து, அஞ்சலி, ஸ்டாலின், ரமேஷ், பரமசிவம் எல்.ஆர்.விஜய், கோடீஸ்வரன் மாணிக்  ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் ‘தர்மதுரை’ என்ற வித்தியாசமான வேடத்தில் சேலம் கே.முருகன் மற்றும் துரை ஆனந்த், C.கருணாநிதி, ராஜேந்திரன்  ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – A.S.ராஜ், இசை – தாமஸ் ரத்னம், படத் தொகுப்பு – ராம்நாத், பாடல்கள் – நந்தலாலா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சாய் இளவரசன்.

இவர்  இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, டி.பி.கஜேந்திரன், கலைமணி,  E.ராம்தாஸ் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.

மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, சேலம், ஏற்காடு போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

 

Our Score