கிட்டப்பா செஞ்சதுல பாதியாச்சும் செய்யணும்னு நினைச்சேன்-ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு..!

கிட்டப்பா செஞ்சதுல பாதியாச்சும் செய்யணும்னு நினைச்சேன்-ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு..!

புகழ்பெற்ற பழம் பெரும் நடிகரும், பாடகருமான கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் வாழ்க்கைக் கதையையும், அக்காலத்திய நாடகக் குழுக்களின் வாழ்க்கையையும் ‘காவியத்தலைவன்’ படமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். இப்படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்.. “கிட்டப்பா செய்ததில் பாதியாவது செய்யணும்னு நினைச்சேன்..” என்று வெளிப்படையாகவே பேசிவிட்டுப் போனார்.

“இந்தப் படம் பண்ணிக்கிட்டிருக்கும்போது நான் ஹாலிவுட்ல ஒரு படம் பண்ணிக்கிட்டிருந்தேன். வெரி டார்க் மூவி. அப்புறம் அந்த படத்தை விட்டுட்டேன். ஸோ, அப்படி பண்ணும்போது  இவங்க வந்தாங்க. ஒவ்வொரு பாட்டுக்குள்ளேயும் 8 பாட்டு வேணும். நாடகத்திற்காக.. இதெல்லாம் பார்க்க முடியுமா படத்துல..? சின்னப் பாட்டுல இருந்து பெரிய பாட்டுன்னு.. அந்த பிரேம்ல இருந்து இந்த டியூனுக்கு 1930-ஸ்ல டியூன் பண்ணி.. ஜனங்க எந்தப் பாட்டுக்கு உக்காந்து கேப்பாங்க.. அப்புறம் எந்த ராகம் யூஸ் செய்யலாம்..? folk யூஸ் பண்ணலாமா..? ஒரு ராகம் மாதிரி இன்னொரு இருக்கக் கூடாது..! ப்ளஸ் ஒரு ஸ்டேண்டெர்டை செக் பண்ணிட்டு போயிருக்காங்க கிட்டப்பா மாதிரியான அந்த டைமிங்ல இருந்தவங்க.. அதுனால அட்லீஸ்ட் கொஞ்சமாச்சும் ஓகேயான மாதிரியிருக்கணும். பட் .. The great team effort is very inspiring artistes and technicians very proud to you.. எல்லாப் புகழும் இறைவனுக்கே..!” என்றார் ரஹ்மான்..

 காலங்கள் வேறாக இருந்தாலும், தமிழ் இசை எப்போதும் ஒன்றுதான்.. ரஹ்மானிடமிருந்து இன்றுவரையிலும் ஒரு நல்ல கர்நாடக சங்கீத பாடல் வந்ததில்லை. அதற்காகவாவது இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்போம்..

Our Score