பாதி சம்பளம் போதும் – ஹீரோவின் பேருதவி..!

பாதி சம்பளம் போதும் – ஹீரோவின் பேருதவி..!

‘காவியத்தலைவன்’ படத்தில் நடிக்க கதையைக் கேட்ட மாத்திரத்தில் ஒப்புக் கொண்ட நடிகர் சித்தார்த், இதில் நடிப்பதற்கான சம்பளத்தை பெருமளவுக்குக் குறைத்துக் கொள்வதாக இயக்குநர் வசந்தபாலனிடம் கூறினாராம்..

“கதையை ரெடி பண்ணிட்டு என் நண்பர் சித்தார்த்தை சந்திக்க டிரை பண்ணேன். கிட்டப்பா காந்தி குல்லா போட்ட போட்டோவை அவர்கிட்ட காட்டி கதை சொல்ல நினைச்சேன். ‘அவரை சுலபமா சந்திக்க முடியாது.. இங்கிலீஷ்ல மட்டும்தான் பேசுவார்ன்’னு அவரைப் பத்தி நிறைய புரளிகள் கிளப்பி விட்டிருந்தாங்க. நான் அவருக்கு போன் பண்ணி சொன்னவுடனே ‘சந்திப்போம் ஸார். நானே உங்களை பார்க்க வரேன்’னாரு. நான் வேணாம்னு சொல்லிட்டு நான் போய் அவரோட வீட்ல சந்திச்சு கதை சொன்னேன். ‘எக்ஸலண்ட். ரொம்ப நல்லாயிருக்கு’ன்னு சந்தோஷமா சொன்னாரு. இந்தக் கதை மேல அவருக்கு இருந்த இன்ட்ரஸ்ட்ல, அவர் எப்பவும் வாங்குற சம்பளத்துல பாதி சம்பளம் கொடுத்தாலே போதும்ன்னாரு.. அந்த அளவுக்கு அவருக்கு கதை பிடிச்சிருந்தது..” என்றார் வசந்தபாலன்.

இது மாதிரியே எல்லா ஹீரோக்களும் கதைக்காகவே நடிக்க ஆரம்பிச்சா தமிழ்ச் சினிமாவும் நல்லாத்தான் இருக்கும்..!

Our Score