full screen background image

மன்சூரலிகான் குத்தாட்டம் ஆடியிருக்கும் ‘கிளம்பிட்டாங்கய்யா’..!

மன்சூரலிகான் குத்தாட்டம் ஆடியிருக்கும் ‘கிளம்பிட்டாங்கய்யா’..!

ஹெவன் எண்டர்டைன்மென்ட் நிறுவனம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ என்ற பெயரில் முழு நீள காமெடி திரைப்படத்தை தயாரித்துள்ளது .

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக பாடகர் மனோவின் மகன் ரித்திஷ் நடிக்கிறார், மற்றைய கதாநாயகர்களாக விஷ்வா, கண்ணன், ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகியாக பிரபல நடிகை இனியாவின் தங்கையான சுவாதி அறிமுகமாகிறார்.

மற்றும் கே.பாக்யராஜ், R.சுந்தராஜன், அனு மோகன், மன்சூர் அலிகான், பவர்  ஸ்டார் சீனிவாசன், R.V. உதயகுமார், நெல்லை சிவா, நிர்மலா ராவ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ரசாக் கான், ஒளிப்பதிவு  – பாஸ்கர், ராஜ்குமார், இசை  – M.S.  ஸ்ரீகாந்த், தயாரிப்பு ஹெவன் எண்டர்டைன்மென்ட்.

இந்தப் படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் காட்டுவாசிகளின் தலைவனாக ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மிகப் பெரிய குத்தாட்டம் ஆடியிருக்கிறாராம். 250 பேர்கொண்ட குருப் டான்சில் 30 பெண்களுக்கு நடுவில் ஸ்பீட் டான்ஸ் போட்டு டான்சர்களை மிரள வைத்துள்ளார் மன்சூரலிகான் என்பது உடன் ஆடியவர்களை திகைக்க வைத்த விஷயம்.

நகர வாழ்க்கையை மையப்படுத்தியது இந்தப் படத்தின் கதை. நான்கு பேர் கொண்ட குழுவிடம் ஒரு வேலையை ஒப்படைக்கின்றனர். அந்த வேலையை அவர்களால் செய்ய முடியாததால் அதையடுத்து நான்கு சின்னப் பசங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவர்களும் வேலையை செய்ய முடியாமல் திணற.. இதனால் விஷயம் பெரிதாகி,  குளறுபடியாகி போலீஸ் என்கவுண்டர்வரைக்கும் போய் காடு, காட்டுவாசிகள், பேய் பங்களா என சுற்றி நகைச்சுவையுடன் முடிகிறதாம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருச்சி, சேலம், கொல்லிமலை மற்றும் சென்னை அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்றது.

Our Score