ஶ்ரீஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரித்துள்ள திரைப்படம் ‘கிடா’.
இந்தப் படத்தில் பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒலிப்பதிவு – தபஸ் நாயக், கலை இயக்கம் – K.B.நந்து, பாடல்கள் – ஏகாதசி, படத் தொகுப்பு – ஆனந்த் ஜெரால்டின், இசை – தீசன் ஒளிப்பதிவு – M.ஜெயப்பிரகாஷ், தயாரிப்பு – ஸ்ரவந்தி ரவி கிஷோர், இயக்கம் – ரா.வெங்கட்.
சமீப காலமாக தொடர்ந்து வன்முறைக் களமாக இருக்கும் தமிழ் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையான உணர்வுகளை, அழகாக சொல்லும் அற்புதமான வாழ்வியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை இந்தப் படத்தின் டிரெய்லரும் உறுதி செய்கிறது.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக இந்தக் ‘கிடா’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் ‘கிடா’ திரைப்படம் உலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்று பாரட்டுக்களையும் குவித்துள்ளது.
இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. மேலும் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
இப்படம் தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகுமென தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஒரு தீபாவளி திருநாளில் நடைபெறும் இந்தக் கதை, தீபாவளி நன்நாளில் வெளியாவதால் படக் குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.









