தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக விஜய்யுடன் இணைந்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மிக முக்கியமான வேடத்தில் ‘வெள்ளி விழா நாயகன்’ என்று அழைக்கப்படும் மோகன் முதல்முறையாக இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து நடிக்கிறார்.
இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, ஜெயராம், அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், சினேகா மற்றும் லைலா இருவரும் சுவாரசியமான வேடங்களில் நடிக்கின்றனர்.
வெங்கட் பிரபு எழுதி, இயக்குகிறார். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ராஜீவன் கலை இயக்கத்தை கவனிக்க, வெங்கட் ராஜன் படத் தொகுப்புக்கு பொறுப்பேற்க, திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார். பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.
‘பிகில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது இந்த 68-வது படத்திற்காக ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் இணைகிறது.
#Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏ.ஜி.எஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது.
சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட், #தளபதி68 அதன் மிகச் சிறந்த படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
சர்வதேச தரத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த #தளபதி68 திரைப்படம் 2024-ம் ஆண்டு வெளியாகும்.