full screen background image

நாளை வெளியாகிறது ‘கே.ஜி.எஃப்.-2’ பட முன்னோட்டம்..!

நாளை வெளியாகிறது ‘கே.ஜி.எஃப்.-2’ பட முன்னோட்டம்..!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் முன்னணி நடிகர் யஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கே.ஜி.எஃப். சாப்டர்-2’ படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகிறது.

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே.ஜி.எஃப்.சாப்டர்-2’.

இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, 250 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை படைத்தது.

இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று வெளியாகிறது.

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்..

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த ‘கே.ஜி.எஃப். சாப்டர்-2’ படத்தில் கதையின் நாயகனாக டராக் ஸ்டார்ட யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி 240 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

அண்மையில் வெளியான இப்படத்தின் பாடலும் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் ஆக்சன் ரசிகர்களுக்கிடையே பேரார்வத்தை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் முன்னோட்டம் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே நாளை வெளியாகிறது.

Our Score