அஸ்விகா கிரியேஷன்ஸ் சார்பில் லயன் பிரின்ஸ் தயாரிக்கும் புதிய படம் ‘கேக்கிறான் மேய்க்கிறான்’.
இந்தப் படத்தில் சபா கதாநாயகனாகவும், லூப்னா அமீர் கதாநாயாகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும் ‘ஆடுகளம்’ நரேன், சபீதா ஆனந்த், ரேகா சுரேஷ், பிளாக் பாண்டி, மதுமிதா, ஷாலு, குமரி ஜெய்சிங், நெல்லை ராஜேஷ், மணிமாறன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கார்த்திக் பாலா, இசை – ஆதித்ய மகாதேவன், பாடல்கள் – முருகன் மந்திரம், நிகரன், படத் தொகுப்பு – சபரி பெரியசாமி, நடனம் – கரண் பாஸ்கர், சதீஷ், சண்டை பயிற்சி – ஸ்பீடு மோகன், தயாரிப்பு – லயன் பிரின்ஸ், எழுத்து, இயக்கம் – எஸ்.சாம் இம்மானுவேல்.
படம் பற்றிப் பேசிய இயக்குநர் எஸ்.சாம் இம்மானுவேல், “இன்றைய சூழலில் இளைஞர்கள் ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறார்கள். இதற்கு பணம் தேவை. பணத்தை குறுக்கு வழியில் தேடும் நண்பர்களுடன் கூட்டு சேர்கிறார் நாயகன். இதனால் ஏற்படும் விளைவுகளை நகைச்சுவை கலந்த காதலுடன், இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போல் உருவாக்கியுள்ளோம்..” என்றார்.
இதன் படப்பிடிப்பு 45 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுள்ளது. மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரம், பூவார், கோவளம், பொன்முடி ஆகிய இடங்களில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் தற்போது நடைபெற்று வருகிறது.









