கலைமகள் புரொடெக்சன்ஸ் சார்பில் சிறுமடை எஸ்.லிங்கம் தயாரித்துள்ள புதிய படம் ‘செல்லமடா நீ எனக்கு’.
இதில் வசீகரன் ஹீரோவாகவும், நேகா ஹீரோயினாகவும் அறிமுகமாகியுள்ளனர். மேலும் போஸ் வெங்கட், ரிஷா, ‘பசங்க’ செந்தி, மீரா கிருஷ்ணன், ரித்து ரவி, அமுதவாணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் தயாரிப்பாளர் சிறுமடை லிங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்திலும், படத்தின் ஒளிப்பதிவாளரான ஆர்.எஸ்.செல்வா ஹீரோயினின் தந்தை வேடத்திலும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆர்.எஸ்.செல்வா, இசை – தாஜ் நூர், படத்தொகுப்பு – கே.சங்கர், கலை – மணிவர்மா, சண்டை பயிற்சி – குன்றத்தூர் பாபு, நடனம் – சங்கர், அஸார், தயாரிப்பு நிர்வாகம் – ஜி.சம்பத், கதை, வசனம், பாடல்கள் – மதுரா வேல்பாரி, திரைக்கதை, இயக்கம் – ஆனந்த் சிவம், தயாரிப்பு – சிறுமடை எஸ்.லிங்கம்.
தாயை வெறுக்கின்ற மகன், பிள்ளைப் பாசத்திற்காக ஏங்கும் தாய்.. இதனை மையக் கருத்தாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
இதன் படப்பிடிப்பு தேவகோட்டை, சிறுமடை, காரைக்குடி, சென்னை போன்ற இடங்களில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இப்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.