அக்காவின் தயாரிப்பில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்..!

அக்காவின் தயாரிப்பில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கில் பிஸியான நடிகையாக இருந்தாலும் மலையாளப் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. காரணம், அங்கே தரப்படும் சம்பளம் குறைவு என்பதும், ஹீரோயின்களை முன்னிலைப்படுத்திய படங்கள் குறைவாக இருப்பதும்தான்.

இதனால் கடந்த சில வருடங்களாகவே தமிழ் மற்றும் தெலுங்கில்தான் கீர்த்தி சுரேஷ் அதிகமாக நடித்துக் கொண்டிருந்தார். தற்போதுதான் மலையாளத்தில் மிகப் பெரிய பட்ஜெட் படமான ‘மரைக்காயர்’ படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார்.

தற்போது மேலும் ஒரு மலையாளப் படத்தில் நாயகியாக நடிக்கவிருக்கிறாராம். ‘வாஷி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் புதிய படத்தை கீர்த்தியின் குடும்ப திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ரேவதி கலாமந்திர் நிறுவனத்தின் சார்பில் கீர்த்தியின் அக்காவான ரேவதி தயாரிக்கிறார். இது ரேவதி கலாமந்திர் தயாரிக்கும் 34-வது படமாகும்.

படத்தில் கீர்த்திக்கு ஜோடியாக டொவினோ தாமஸ் நடிக்கிறார். பிரபல மலையாள சினிமா புகைப்படக் கலைஞரான கோபாலகிருஷ்ணனின் மகன் விஷ்ணுதான் இந்தப் படத்தை இயக்கப் போகிறாராம். விஷ்ணு இயக்கவிருக்கும் முதல் படம் இதுவேயாகும்.

வரும் நவம்பர் 17-ம் தேதியன்று படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம்.

Our Score