full screen background image

ஆகஸ்ட்-1-ம் தேதி வெளியாகிறது ‘கழுகு-2’ திரைப்படம்..!

ஆகஸ்ட்-1-ம் தேதி வெளியாகிறது ‘கழுகு-2’ திரைப்படம்..!

கடந்த 2012-ம் ஆண்டில் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் இயக்குநர் சத்ய சிவாவின் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘கழுகு’.

ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் ‘கழுகு-2’ படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தை மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரித்துள்ளார்.

‘கழுகு’ படத்தில் கொடைக்கானல் மலைப் பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களில் பிணங்களை உயிரைப் பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா, இந்த ‘கழுகு-2’ படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான காட்டு நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் காளி வெங்கட்டும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபி கிருஷ்ணா படத் தொகுப்பை மேற்கொள்கிறார்.

தற்போது இந்தப் படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி சமீபத்தில் இத்திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.

த்ரில் நிறைந்த இந்த திரைப்படத்தை ரசித்துப் பார்த்த விநியோகஸ்தர்கள், கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து கண் கலங்கியிருக்கிறார்கள். இதில் பெரிதும் அகமகிழ்ந்துபோன கோவை விநியோகஸ்தரான திரு.சிதம்பரம், கோவை ஏரியாவின் வெளியீட்டு உரிமையை அவுட் ரேட் முறையில் வாங்கியுள்ளார்.

இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. வரும் ஆகஸ்ட்-1-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

Our Score