full screen background image

“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..!

“நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் ஜெயிக்க முடியாது” – கவிஞர் முத்துலிங்கத்தின் ஆரூடம்..!

எப்போ வருவார்.. என்னிக்கு வருவார்.. எந்தத் தோற்றத்தில் வருவார்.. யாருடன் கூட்டணி வைத்து வருவார்.. என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் கடந்த 25 வருடங்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை..!

அவரும் இதோ வருகிறேன்… அதோ வருகிறேன்.. என்றெல்லாம் சொல்லி வந்தாலும் முறையாக இதுவரையிலும் வரவில்லை. அவர் கட்சி ஆரம்பிக்கும் முன்பாகவே ரஜினி கட்சி ஆரம்பித்தால் நீங்கள் சேர்வீர்களா என்ற கேள்வியை பல கோடம்பாக்க நட்சத்திரங்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் கவிஞர் முத்துலிங்கம் ‘சாய் வித் சித்ரா’ பேட்டியில் ரஜினி கட்சி ஆரம்பிப்பது பற்றி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“ரஜினிக்கு கமல்ஹாசனைவிடவும் ரசிகர் கூட்டத்தினர் அதிகம் என்றே நினைக்கிறேன். இருந்தாலும், அவர் இனிமேல் கட்சி ஆரம்பிக்க மாட்டார். இது எனது கருத்து. அப்படியே அவர் அரசியலுக்குள் வந்து கட்சியைத் துவக்கி தேர்தலில் போட்டியிட்டாலும் அவரால் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு ஜெயிக்க முடியாது. வேண்டுமானால் வாக்குகளை பிரிப்பார். இதைத்தான் என்னால் சொல்ல முடியும்.

நான் இதுவரையிலும் அ.தி.மு.க.வில் இருப்பதற்குக் காரணம் செல்லுமிடமெல்லாம் ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர். புகழ் பாடுவதுதான். இதற்கு வாய்ப்பளிக்கும் ஒரு கட்சி அ.தி.மு.க.தான். அதனால்தான் நான் அதில் இருக்கிறேன்.

ஒருவேளை ரஜினி கட்சி ஆரம்பித்து என்னை அழைத்தால் அங்கே எம்.ஜி.ஆர். புகழ் பாட தடை இல்லையென்றால் செல்வேன்..” என்று கூறியிருக்கிறார் கவிஞர் முத்துலிங்கம்.

Our Score