Maple Leafs Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் ‘கட்டில்’ திரைப்டம் இன்று துவங்கியது.
நடிகரும், இயக்குநருமான இ.வி.கணேஷ் பாபு இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ நரேன் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு – வைட் ஆங்கிள் ரவிசங்கரன், இசை – இலக்கியன், கலை இயக்கம் – பி.கிருஷ்ணமூர்த்தி, லோகு, நடன இயக்கம் – ‘மெட்டி ஒலி’ சாந்தி, பாடல்கள் – கவிஞர் முத்துலிங்கம், மக்கள் தொடர்பு – சதீஷ்.
பிரபல படத் தொகுப்பாளரும், தேசிய விருது பெற்ற இயக்குநருமான பி.லெனின் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். நாயகன் இ.வி.கணேஷ் பாபுவே இந்தப் படத்தை தயாரித்து இயக்குகிறார்.
இந்தப் படத்தின் துவக்க விழா இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.
இந்த எளிய விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி படத்தினைத் துவக்கி வைத்தார். மேலும், நாயகி சிருஷ்டி டாங்கே, நடிகர் ஆடுகளம் நரேன், நடிகர் சிவாஜி மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.