full screen background image

ஒரு பாட்டியின் கதையைச் சொல்லும் படம் ‘கதிர்’

ஒரு பாட்டியின் கதையைச் சொல்லும் படம் ‘கதிர்’

துவாரகா ஸ்டுடியோஸ் சார்பாக அறிமுக இயக்குநர் தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கதிர்’.

இந்தப் படத்தில் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்க சந்தோஷ் பிரதாப் மற்றும் பிரபல மலையாள நடிகை ரஜினி சாண்டி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பாவ்யா ட்ரிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – துவாரகா ஸ்டுடியோஸ், இயக்கம் – தினேஷ் பழனிவேல், இசை – பிரஷாந்த் பிள்ளை, ஒளிப்பதிவு – ஜெயந்த் சேது மாதவன், படத்தொகுப்பு – தீபக் துவாரகநாத், பாடல்கள் – கார்த்திக் நேத்தா, உமா தேவி, சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், சவுண்ட் டிசைன் & மிக்ஸிங் – ஸின்க் சினிமா, மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM).

“நாம வாழ்றது முக்கியமில்ல… யாருக்காக வாழறோம்ங்கிறதுதான் முக்கியம்” என்ற கருத்தைதான் இந்தக் ‘கதிர்’ திரைப்படம் முன்னிறுத்துகிறது.

கிராமத்திலிருந்து நகர வாழ்க்கைக்கு செல்லும் கதாநாயகன் நகர ஓட்டத்திற்க்கு ஈடு கொடுக்க முடியாமல் தடுமாறி நிற்கிறான். அங்கே அவன் தங்கும் வீட்டின் வயதான உரிமையாளரான பாட்டியை சந்தித்த பின்பு அவன் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதுதான் இந்தக் ‘கதிர்’ படத்தின் கதை.

இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

 
Our Score