‘கத்துக்குட்டி’ படத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த குக்கிராமத்துப் பெண்ணாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே, தஞ்சை மாவட்ட வட்டார வழக்கை அப்படியே பேசி அசத்தி இருக்கிறார். படத்தில் நரேனுடன் சிருஷ்டி நேருக்கு நேர் மோதும் சண்டைக் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளதாம்.
இதில், கிராமத்துப் பெண்கள் தலைமுடியை அள்ளி முடிந்துகொண்டு சண்டை போடுவதைப்போல் அப்படியே ஆக்ரோஷம் காட்டி சிருஷ்டி சண்டை போட, யூனிட்டே கை தட்டிப் பாராட்டி இருக்கிறது.
“கிராமத்துப் பெண்கள் எப்படி சண்டை போடுவார்கள் என்பது மும்பையில் பிறந்த எனக்கு கொஞ்சமும் தெரியாது. அதனால், சாதாரணமாக சண்டை போட்டேன். அதில், திருப்தி இல்லாத இயக்குநர் இரா.சரவணன், கிராமத்துப் பெண்கள் எப்படி கொண்டையை முடிந்து சண்டை போடுவார்கள் என்பதை சில கிராமத்துப் பெண்களை வைத்தே சொல்லிக் காட்டினார். அப்புறம்தான் அதிரடியா விளையாடினேன்” என்கிறார் சிருஷ்டி டாங்கே.