பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம்

பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’ திரைப்படம்

M பிக்சர்ஸ் என்ற பட  நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ‘கருத்துக்களை பதிவு செய்.’

இந்தப் படத்தில் ‘கலையுலகின் இலட்சிய நடிகர்’ என்று போற்றப்பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின்  பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகங்கள்தான்.

ஒளிப்பதிவு – மனோகர், இசை – கணேஷ் ராகவேந்திரா, பாடல்கள் – சொற்கோ, கலை இயக்கம் – மனோ, படத் தொகுப்பு – மாருதி, நடன இயக்கம் – எஸ்.எல்.பாலாஜி, தயாரிப்பு மேற்பார்வை – D.P.வெங்கடேசன், கதை திரைக்கதை வசனம் – ராஜசேகர், இணை தயாரிப்பு – J.S.K. கோபி  இயக்குநர் – ராகுல்.

இயக்குநர் ராகுல் ஏற்கெனவே ‘ஜித்தன்-2’, ‘1 A.M.’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குநர் ராகுல் பேசும்போது, “எனது முந்தைய படங்களை போலவே இந்தப் படமும் ஹாரர் டைப் படம்தான். ஹாரர் டைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு என்பதை நம்புகிறவன் நான்.

இன்றைய பேஸ்புக், இணையதளம், மற்றும் சமூக வலைத்தள காதல்கள் எல்லாமே பெண்களை சிக்க வைக்கும் அபாய வலை என்பதை சொல்லும் படம்தான் இது. 

சமூக வலைத்தலமான பேஸ்புக் பற்றியதுதான் இந்த படம். பேஸ்புக்கில் அறிமுகமாகி நண்பர்களாக பழகி, காதலர்களாகி பின் அவனிடம் தன் கற்பை இழந்த பெண். அதோடு அந்த பெண்ணை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்யும் கொடூரமானவனிடமிருந்து தப்பி வந்த பெண் என்ன முடிவெடுக்கிறார்..? தன்னை சீரழித்தவனுக்கு என்ன மாதிரியான தண்டனையை அவள் கொடுத்தாள் என்பதுதான் கதை.

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் பலவற்றை இந்த ‘கருத்துக்களை பதிவு செய்’ படத்தில் நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடையும் கட்டத்தில்தான் பொள்ளாச்சி சம்பவம் பெரிதாக வெடித்திருக்கிறது.

நானும் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்புதான் என்பதை அப்போதே பதிவு செய்திருந்தேன். படம் விரைவில் வெளி வர உள்ளது…” என்றார் ராகுல்.

Our Score