full screen background image

சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கும் மதுமிதாவின் ‘கே.டி.’ (எ) கருப்பு துரை திரைப்படம்

சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கும் மதுமிதாவின் ‘கே.டி.’ (எ) கருப்பு துரை திரைப்படம்

சரிகமா குழுமத்தின் திரைப்படத் தயாரிப்பு பிரிவான யூட்லீ பிலிம்ஸ் ‘கே.டி’ என்கிற ‘கருப்பு துரை’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தில் மு.ராமசாமி, நாக் விஷால்(அறிமுகம்), யோக் ஜபி ஆகியோர் நடித்துள்ளனர்.

மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு செய்ய, சபரிவாசன் சண்முகம் திரைக்கதை-வசனம் எழுத, விஜய் வெங்கடராமன் படத் தொகுப்பு பொறுப்புகளை கவனிக்க, கலை இயக்கத்திற்கு  இம்மானுவேல் ஜாக்சன் பொறுப்பேற்க,  கார்த்திகேய மூர்த்தி இசையமைத்திருக்கிறார்.

madhumitha
‘வல்லமை தாராயோ’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி ‘கொல கொலயா முந்திரிக்கா’, மூணே மூணு வார்த்தை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரான மதுமிதா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

சமுதாயத்தில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் ‘தலைக் கூத்தல்’ எனும் ஒரு பழமையான சடங்கு, ஒருவரின் வாழ்வில் ஏற்படுத்தும் தீவிரமான தாக்கத்தை, யதார்த்தம் குறையாமல், புதுமையான முறையில் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மதுமிதா.

REEL_03_8432

வாழ்வின் இறுதி நிலையில் இருக்கும் ஒரு 80 வயது ஆதரவற்ற முதியவரும், வாழ்வின் முதல் படியில் இருக்கும் அநாதையான 8 வயது சிறுவனும், வயது வித்தியாசம் மறந்து, நண்பர்களாய் தங்களுக்குள் நட்பு பாராட்டுவதை, இதுவரை சொல்லாத கோணத்தில், முற்றிலும் புதுமையான பரிமாணத்தில், தங்களது நிறைவேறாத ஆசைகளை வாழ்ந்து களிக்கும் விதத்தை, ஆழமாக உணர்ந்து, ரசிக்கத்தக்க சுவராஸ்யத்துடன், ஜனரஞ்சகமாகப் படைத்திருக்கிறார் இயக்குநர் மதுமிதா.

இந்த ‘கே.டி.’ என்ற கருப்பு துரை திரைப்படம்  தற்போது சர்வதேச அளவில் உலகத் திரைப்பட உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

IMG_20190907_224102__01

இத்திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு, விருதுகளை  வென்று வருவது குறிப்படத்தக்கது.

லண்டனில் நகரில் நடைபெற்ற ‘ஆசிய திரைப்பட விழா’வில் கலந்து கொண்டு ‘சிறந்த இயக்குநர்’ விருதையும், அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்ற ‘இந்திய திரைப்பட விழா’வில் ‘சிறந்த இயக்குநர்’ விருதையும், சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ஆசிய சர்வதேச திரைப்பட விழா’வில் ‘ஜூரி விருதையும்’ வென்றிருக்கிறது. மேலும், ‘தஸ்வீர் தெற்காசிய திரைப்பட விழா’, ‘அமெரிக்க-ஆசிய திரைப்பட விழா’, 1௦0-வது ‘ஜாக்ரான் திரைப்பட விழா’, ‘நியூயார்க் இந்திய திரைப்பட விழா’, ‘ஒட்டாவா இந்திய திரைப்பட விழா’ என பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்டு, திரையிடப்பட்டு ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டினைப் பெற்றுள்ளது.

இத்திரைப்படம், வருகின்ற நவம்பர் மாதம் வெள்ளித் திரைக்கு வரவிருக்கிறது.

Our Score