பட வாய்ப்புக்காக அவசரத் திருமணம் செய்த நடிகர்..!

பட வாய்ப்புக்காக அவசரத் திருமணம் செய்த நடிகர்..!

நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும்தான். அதுக்காக இப்படியா..?

‘ஜிகர்தண்டா’ படத்தில் நடித்த நடிகர் கருணாகரன் தனக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றிய சுவாரஸ்யமான செய்தியொன்றை நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார்.

“திடீர்ன்னு கார்த்திக் கூப்பிட்டு, இந்தப் படத்துல உனக்கு ஒரு முக்கியமான கேரக்டர் இருக்கு.. 2 மாசம் மதுரைலதான் இருக்கணும்னாரு.. ‘நான் கல்யாணம் பண்ணப் போறனேன்’னு இழுத்தேன். ‘அப்போ ஷூட்டிங் தொடங்குறதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சுக்க’ன்னாரு.. வேற வழியில்லாம பத்திரிகைகூட அடிக்காம, அவசரம், அவசரமா அடுத்த 4 நாள்ல ஏ்ற்பாடு செஞ்சு மேரேஜ் பண்ணிக்கிட்டேன். மேரேஜ் முடிஞ்ச 4-வது நாள் மதுரைக்குக் கிளம்பிட்டேன். அடுத்த 2 மாசமும் அங்கதான்..” என்றார் கருணாகரன்.

படத்தில் ஹீரோ சித்தார்த்துடன் நெருக்கமான நண்பராக நடித்திருக்கிறார் கருணாகரன். டிரெயிலரில் பார்த்தாலே தெரிகிறது.. அவர் இல்லாமல் படம் இல்லை போலும்.. ஹீரோவுக்காக அடியெல்லாம் வாங்கியிருக்கிறார். சித்தார்த் தான் பேசும்போதுகூட “இந்தப் பட ஷூட்டிங்கப்போ அதிகமா ஒட்டிக்கிட்டிருந்ததும்.. நிறைய பேசி, ஷேர் பண்ணிக்கிட்டதும் கருணாகூடத்தான்..” என்றார்.. படத்தின் முக்கியமான டயலாக்கான “அவனைத் தூக்கணும்டா..” என்பதையும் கருணாகரனே சொல்கிறார்.. இந்த அளவுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் கேரக்டர் என்பதால் தன்னுடைய ரியல் வாழ்க்கையில் மொக்கையைச் செய்து ரீல் வாழ்க்கையில் நிறைய ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார் கருணாகரன்.. வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

ஆனாலும், புதுமாப்பிள்ளையை இப்படி 2 மாசமா காய விட்ட இந்த இயக்குநரை என்ன செய்யலாம்..?

Our Score