full screen background image

‘கோச்சடையான்’ பாடல்கள் லிஸ்ட் வெளியீடு..!

‘கோச்சடையான்’ பாடல்கள் லிஸ்ட் வெளியீடு..!

‘கோச்சடையான்’ பீவர் ஆரம்பித்துவிட்டது. இன்னமும் 3 நாட்கள் மட்டுமே பாக்கியிருக்கும் சூழலில் விழாவை பற்றிய செய்திகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. இதே ‘சத்யம்’ தியேட்டரில்தான் ‘எந்திரன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் நடத்தப்பட்டது. இப்போது ‘கோச்சடையானின்’ பாடல்களும் இங்குதான் வெளியிடப்பட உள்ளது.

kochadaiyan-1

இன்றைய செய்தியாக ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ உரிமையைப் பெற்றுள்ள சோனி மியூஸிக் நிறுவனம் ‘கோச்சடையான்’ படத்தின் பாடல்களின் லிஸ்ட்டை வெளியிட்டிருக்கிறது..

kochadaiyan-songs-tracks-1

‘கோச்சடையான்’ பாடல்கள் லிஸ்ட் :

1. ‘எங்கே போகுதோ வானம்’ என்று துவங்கும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்.

2. ‘மெதுவாகத்தான்’ என்ற துவங்கும் பாடலை வாலி எழுதியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியமும், சாதனா சர்கமும் பாடியிருக்கிறார்கள்.

3. ‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்று துவங்கும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். இதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹரிசரணுடன் இணைந்து பாடியிருக்கிறார்.

4. ‘மணப்பெண்ணின் சத்தியம்’ என்று துவங்கும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். லதா ரஜினிகாந்த் பாடியிருக்கிறார்.

5. ‘இதயம்’ என்று துவங்கும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். சீனிவாஸ், சின்மயி பாடியிருக்கிறார்கள்.

6. ‘எங்கள் கோச்சடையான்’ என்று துவங்கும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். கோச்சடையான் டீமே பாடியிருக்கிறதாம்..

7. ‘மணமகனின் சத்தியம்’ என்று துவங்கும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். ஹரிசரண் பாடியிருக்கிறார்.

8. ‘ராணாஸ் டிரீம்ஸ்’ என்ற தீம் பாடலை லண்டன் சீஸன்ஸ் ஆர்கெஸ்ட்ரா பாடியுள்ளது.

9. ‘கர்ம வீரன்’ என்று துவங்கும் பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானும், ஏ.ஆர்.ரைஹானாவும் பாடியிருக்கிறார்கள்.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், லதா ரஜினிகாந்தும் ஒரே படத்திற்காக பாடல்களை பாடியிருப்பது இதுதான் முதல் முறை..!

சோனி நிறுவனத்தின் ஆடியோ விற்பனை வரலாற்றில் இந்த கோச்சடையான் சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Our Score