தயாரிப்பாளர் சி.வி.குமார் தனித்து தன்னுடைய திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவிருக்கும் படம் ‘இறைவி’.
‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ என தனது இரண்டு படங்களிலும் வித்தியாசமான கதைக் களங்களை கையாண்டு வெற்றி பெற்ற இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார்.
‘இறைவி’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கேவி மிக் ஏரி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் டிசம்பர் மாதமே துவங்கவுள்ளது.
‘ஜிகர்தண்டா’வின் எக்குத்தப்பான வெற்றியால் கார்த்திக் சுப்புராஜை தேடி தயாரிப்பாளர்களும் படையெடுத்தார்கள். ஆனாலும் அனைவருக்கும் கொஞ்சம் பொறுத்திருக்கும்படி பதில் சொன்னவர், இப்போது தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்தியவரிடமே மீண்டும் வந்து தன்னுடைய மூன்றாவது படத்தை இயக்குகிறார் என்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.. !
வாழ்த்துகள் தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுவுக்கும்..!