பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் கார்த்தியுடன், நாகார்ஜூனா நடிக்கும் தமிழ்ப் படம்..!

பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் கார்த்தியுடன், நாகார்ஜூனா நடிக்கும் தமிழ்ப் படம்..!

‘ஈ’ திரைப்படத்தில் சம்பாதித்ததை ‘இரண்டாம் உலக’த்தில் கோட்டைவிட்ட, பிவிபி சினிமாஸ் மீண்டும் தயாரிப்புத் தொழிலில் இறங்குகிறது..

இந்த முறை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் இணைந்து கார்த்தி நடிக்கிறார். கார்த்தி இந்தப் படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியின் கேரக்டரில் முன்பு ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பதாக இருந்தது. என்ன காரணத்தினாலோ திடீரென்று ஜூனியர் என்.டி.ஆர். இதில் நடிக்க மறுத்துவிட கார்த்திக்கு அதிர்ஷ்டம் அழைப்பு விடுத்திருக்கிறது..!

நாகார்ஜூனா நேரடியாக தமிழில் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது. இதற்கு முன்பு 1997-ல் குஞ்சுமோன் தயாரிப்பில் ‘ரட்சகன்’ படத்தில் நடித்திருந்தார். ராம்கோபால்வர்மா இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்த ‘சிவா’ என்ற தெலுங்கு படம் தமிழில் ‘உதயம்’ என்ற பெயரில் வெளியாகி, அவரை தமிழகத்து ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது.

சில ஆண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் நாகார்ஜூனா தெலுங்கில் நடித்த ‘கீதாஞ்சலி’ என்ற படம் தமிழில் ‘இதயத்தை திருடாதே’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸாகி வசூலை வாரிக் குவித்தது நினைவிருக்கலாம்.

இந்தப் படத்தை தெலுங்கில் ‘முன்னா’, ‘பிருந்தாவனம்’, ‘யெவடு’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் Vamshi Paidipally இயக்குகிறார்.

மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படுமாம்..!

Our Score