‘கர்மா’ என்கிற புதிய தமிழ்த் திரைப்படம் Hollywood Sky Film Festival பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
R.அர்விந்த் எழுதி இயக்கியிருக்கும் புதிய தமிழ் திரைப்படம் கர்மா. மிகவும் வித்தியாசமான Thriller கதையம்சம் கொண்ட திரைப்படம் இது. ஒளிப்பதிவு V.B.சிவானந்தம், இசை – L.V.கணேசன், பாடல்கள் – வைரமுத்து, படத் தொகுப்பு – வினோத் பாலன்.
தற்போது ஹாலிவுட்டில் நடைபெறும் ‘Hollywood Sky Film Festival’-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கர்மா திரைப்பட விழா குழுவினர் பெருமையாகச் சொல்கின்றனர்.
மேலும் இந்த கர்மா திரைப்படம் சமீபத்தில் கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற ‘All Lights India International Film Festival’–ல் முதன் முறையாக திரையிடப்பட்டது என்பதும் குறிப்படத்தக்கது.