full screen background image

ஆக்‌ஷன் நாயகியாக த்ரிஷா நடித்திருக்கும் ‘கர்ஜனை’ திரைப்படம்

ஆக்‌ஷன் நாயகியாக த்ரிஷா நடித்திருக்கும் ‘கர்ஜனை’ திரைப்படம்

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் சுந்தர் பாலு இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. த்ரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சினி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா, சரத் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இசை – அம்ரிஷ், ஒளிப்பதிவு – சிட்டி பாபு, படத்தொகுப்பு – சதீஷ் சூர்யா, சண்டைக் காட்சி – சுப்ரீம் சுந்தர், பாடல்கள் – விவேகா, சொற்கோ, கருணாகரன், நடனம் – நோபல், படங்கள் – சீனு, மக்கள் தொடர்பு – இரா.குமரேசன், நிர்வாகத் தயாரிப்பு – ஹேபாஸ்கர், தயாரிப்பு – ஜோன்ஸ், எழுத்து – இயக்கம் – சுந்தர் பாலு.

Director Sundar balu (1)

இப்படம் குறித்து இயக்குனர் சுந்தர் பாலு கூறும்போது, “இப்படத்தின் கதைக் களமும், திரைக்கதையும் த்ரிஷாவிற்கு மிகவும் பிடித்தது. கதையை கேட்டவுடனே படத்தில் நடிக்க சம்மதித்தார்.

ஐந்து நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து அதை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பேரம் பேசி விற்று வருகிறார்கள். இந்நிலையில், காதலிக்க மறுத்த பெண்ணை, தன் நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார்கள்.

trisha (2)

இதன் பின்னணியில் நடக்கும் கதையை ஆக்‌ஷன் திரில்லருடன் படமாக்கி இருக்கிறேன். ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் த்ரிஷா நடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் த்ரிஷா தயங்காமல் டூப்பில்லாமல் நடித்தார்.

trisha (4)

அம்ரிஷ் இசையில் 3 பாடல்கள் உருவாகியுள்ளது. இதில் 2 பாடல்கள் கதையோடு அமைத்திருக்கிறேன். மே மாதம் இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். காரைக்குடி, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளேன். இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘கர்ஜனை’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்த படமாக இருக்கும்..” என்றார்.

Our Score