full screen background image

ஆக்சன் நாயகியாக திரிஷா நடிக்கும் ‘கர்ஜனை’ திரைப்படம்

ஆக்சன் நாயகியாக திரிஷா நடிக்கும் ‘கர்ஜனை’ திரைப்படம்

செஞ்சூரி இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜோன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘கர்ஜனை’.

இந்தப் படத்தில் திரிஷா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும், வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, ஸ்ரீரஞ்சனி, தவசி, அமித் பார்கவ், சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா உள்பட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

அம்ரீஷ் இசை அமைக்க, சிட்டிபாபு.கே ஒளிப்பதிவு செய்கிறார். சண்டை பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், நடனத்தை நோபால் அவர்களும் அமைத்துள்ளனர். விவேகா, கருணாகரன், சொற்போ பாடல்களை எழுத சரவணன் கலை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். எழுத்து, இயக்கம் – சுந்தர் பாலு.

trisha-3

‘கர்ஜனை’ படம் குறித்து இயக்குநர் சுந்தர் பாலு பேசும்போது, “பெரிய ஹீரோக்கள், மற்றும் பெரிய இயக்குநர்கள் படங்களில் மட்டுமே நடித்து வரும் திரிஷா, இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்குக் காரணம் படத்தின் கதைதான்.

செய்யாத தவறுக்கான பழி நம் மீது விழுந்தால் நமக்கு கோபம் வருமல்லவா. அந்தக் கோபம்தான் இந்த ‘கர்ஜனை’ திரைப்படம்.

trisha-2

செய்யாத தவறுக்கு திரிஷாவின் காதலர் மேல் பழி வர அவர் ஒரு பிரச்சனையில் மாட்டுகிறார். அதில் இருந்து அவரை மீட்டு வரப் போராடும் திரிஷா அந்தப் பிரச்சனையில் ஒரு இழப்பைச் சந்திக்கிறார். பின்னர் சுதாரித்து எழுந்து, கர்ஜித்து அந்த வில்லன் கூட்டத்தை திரிஷா பழிக்குப் பழி வாங்குவதுதான் இந்த ‘கர்ஜனை’ படத்தின் திரைக்கதை.

trisha-1

செய்யாத தவறால் ஒரு இழப்பைச் சந்திக்கும் அவர் பழிக்குப் பழி வாங்குவதிலும் ஒரு நியாயம் இருக்கும்விதமாக கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நினைத்தே திரிஷா நடித்துள்ளார். நிச்சயம் திரிஷாவின் கேரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும்…” என்றார்.

தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பால் பதினைந்து ஆண்டுகளாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் திரிஷா இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளதால் ‘கர்ஜனை’ எதிர்பார்ப்புள்ள படமாகியுள்ளது.

இப்படத்தை SDC பிக்சர்ஸ் நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது.

 

Our Score