full screen background image

‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடிக்க அதிகச் சம்பளம் கேட்ட கரீனா கபூர்..!

‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடிக்க அதிகச் சம்பளம் கேட்ட கரீனா கபூர்..!

இந்தியாவில் அதிகச் சம்பளம் வாங்கிய நடிகை என்ற பெயரை கரீனா கபூர் பெறப் போகிறார்.

இந்தி நடிகையான கரீனா கபூர் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் பெற்ற நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவருக்கேற்ற கதாபாத்திரங்கள் அவரைத் தேடி வந்து கொண்டுதான் இருக்கின்றன.

தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஒரு புதிய திரைப்படம் உருவாகவிருக்கிறது.

இராமாயணக் கதையை வைத்து உருவாகவிருக்கும் இத்திரைப்படம் 3-டி தொழில் நுட்பத்தில் தயாராகவுள்ளது.

இந்தப் படத்தை தங்கல்’ படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரியும், ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உடையாரும் இணைந்து இயக்குகிறார்கள்.

இந்தப் படத்தில் சீதையாக நடிக்கத்தான் கரீனா கபூரை அணுகியிருக்கின்றனர். அவர் இந்தப் படத்தில் நடிப்பதற்காக 12 கோடி ரூபாயை சம்பளமாகக் கேட்டிருப்பதுதான் இப்போது பாலிவுட்டின் பரபரப்பு செய்தி.

கரீனா கபூர் தற்சமயம் பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக 8 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கி வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்திற்கு அவர் 12 கோடியை சம்பளமாகக் கேட்டது அந்தப் படக் குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் கரீனா கபூர் கேட்டதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. இந்தப் புதிய ராமாயணம் படத்திற்காக கரீனா கபூரிடம் 10 மாதங்கள் தொடர்ச்சியாக அவர்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறார்கள். இதனால்தான் தனது சம்பளத்தையும் கரீனா கபூர் உயர்த்தி கேட்டாராம்..

நியாயம்தானே..?

Our Score