“என்னைவிட சிறந்த நடிகை உலகத்திலேயே கிடையாது” என பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கங்கனா ரனாவத் சர்ச்சைகளில் சிக்குவது என்பது புதிதல்ல. தினமும் ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பிவது அவரது வாடிக்கை.
இவர் தற்போது தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகிவரும் ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதாவின் ரோலில் நடிகை கங்கனா நடித்துள்ளார். இயக்குநர் ஏ.எல்.விஜய் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
‘தலைவி’ படத்தின் பல புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட்டாகியுள்ளது.
இந்தத் ‘தலைவி’ படத்தின் புகைப்படத்தை வைத்து நடிகை கங்கனா ரனாவத் வழக்கம் போல, நேற்றைக்கு ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவொன்றை போட்டு டாப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளார்.

அதில் ‘தலைவி’ படத்தில் வரும் ஒரு காட்சிக்கான புகைப்படத்தையும், துப்பாக்கியுடன் ஆக்ஷன் ஹீரோயின் போல இருக்கும் ‘தாகட்’ ஹிந்தி படத்தின் புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார்.

கூடவே, “பெரிய ட்ரான்ஸ்போர்மேஷன் அலார்ட், என்னைப்போல நடிப்பில் சிறந்தவர் இப்போதைக்கு இந்த உலகத்தில் யாரும் இல்லை. மெரில் ஸ்ட்ரீப் போல என்னால் ராவான கேரக்டரிலும் நடிக்க முடியும், கல் கடூட் போல ஆக்சன் மற்றும் கிளாமர் ரோலிலும் நடிக்க முடியும். என்னைவிட சிறந்த நடிகை இவ்வுலகில் யாருமில்லை…” என கங்கனா எழுதியிருக்கிறார்.
சிறப்பாக நடித்திருக்கிறேன் என்று சொன்னால்கூட பரவாயில்லை. என்னைவிட சிறந்த நடிகை யாருமே இல்லை என்று அவருக்கு அவரே பிரமோஷன் செய்திருப்பது இந்தியாவின் அனைத்து மாநில திரையுலகங்களிலும் அவரைக் கேலி செய்ய வைத்திருக்கிறது..!
இதற்கெல்லாம் அசர்ற ஆளா கங்கணா..?