குடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’ 

குடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் ‘கண்களை மூடாதே’ 

செயிண்ட் ஜார்ஜ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் K.E.எட்வர்ட் ஜார்ஜ் தயாரிக்கும் படம் ‘கண்களை மூடாதே.’  

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து, தயாரித்து, நாயகனாகவும் நடித்துள்ளார் K.E.எட்வர்ட் ஜார்ஜ்.

நாயகியாக சித்ராய் நடித்துள்ளார். மற்றும் போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன் கிங்காங், சின்னதம்பி, மார்த்தாண்டம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – திஷாத் சாமி, படத் தொகுப்பு  – தமிழ்மணி சங்கர், துணை இயக்கம் –  அந்தோணி பிச்சை, எஸ்.ராயப்பன், மக்கள் தொடர்பு – புவன்.  

படம் பற்றி இயக்குநர் எட்வர்ட் ஜார்ஜ் கூறுகையில், “முற்றிலும் வித்தியாசமான காதல் கலந்த குடும்பக் கதைதான் இந்தப் படம். திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி எப்படியெல்லாம் இருக்கவேண்டும். நம் பாரம்பரியம் என்ன என்பதை உணர்த்தும் கதை.

படம் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் நாயகியைக் காணும்போது நமக்கு இவர் போல ஒரு மனைவி கிடைக்காதா என்று மனதில் தோன்றும். அதேபோல் எல்லா பெண்களுக்கும் இந்தப் படத்தின் நாயகனைப்போல் கணவன் அமைந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று ஏங்குவார்கள் அப்படியான திரைக்கதை இது.

படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது. படம் வரும் பிப்ரவரி  28-ம் தேதி வெளியாகிறது…” என்றார்.

Our Score