மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடட் தயாரித்திருக்கும் புதிய படம் ‘ஒய்’. இதில் கீதன் பிரிட்டோ, ஈஷா இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – யுகராஜ், கலை – மணிமொழியன், படத்தொகுப்பு – மணி, எழுத்து – பாஸ்கரன், பாடல்கள் – விவேகா, ஏகாதசி, மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு – மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடட், இயக்கம் – ஃப்ரான்சிஸ் மார்கஸ்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் தியேட்டரில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தின் இசையை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட இசைஞானி இளையராஜா பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசும்போது, “தன் வசீகர இசையால் பல இளம் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் கனவு படங்களுக்கு வெற்றியை அடித்தளமாக அமைத்தவர் இளையராஜா. ‘16 வயதினிலே’ உள்ளிட்ட பல படங்கள் அதற்கு சான்று. இன்று ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கும் ‘ஓய்’ படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படமும் வெற்றி பெற்று சாதனை படைக்க எனது வாழ்த்துக்கள்..” என்றார்.