ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் ‘கலியுகம்’ திரைப்படம்

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் ‘கலியுகம்’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் புத்தம் புதிய கதைக் களத்துடன் இளம் இயக்குநர்கள் அறிமுகமாகி வருகிறார்கள். இதனை சமீபமாக வரும் படங்களின் கதைக் களங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

இதுவரை தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே வந்திராத ஒரு புத்தம் புதிய கதைக் களத்துடன் இளம் படை ஒன்று களம் காணவுள்ளது.

‘கலியுகம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆர்.கே.இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ்.ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார்.

இந்தக் கதையைக் கேட்டுவிட்டு உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

தயாரிப்பு நிறுவனம் – ஆர்.கே.இண்டர்நேஷனல், தயாரிப்பாளர் – ப்ரைம் சினிமாஸ் உரிமையாளர் கே.எஸ்.ராமகிருஷ்ணா, எழுத்து, இயக்கம் – பிரமோத் சுந்தர், ஒளிப்பதிவு – ராம் சரண், மக்கள் தொடர்பு – யுவராஜ்.

முழுக்க, முழுக்க ஒரு இளைய தலைமுறை பட்டாளமே இந்தப் படத்தில் பணிபுரியவுள்ளது. இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தை இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கவுள்ளார். இவர் யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியவில்லை. விளம்பரத் துறையில் பணிபுரிந்து, சில குறும் படங்களை இயக்கியுள்ளார்.

பேரழிவுக்கு பிந்தைய உலகம் எப்படியிருக்கும் என்ற மையக் கருத்தைக் கொண்ட களமாக இந்தப் படம் உருவாகிறது.

ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகும் இதன் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் சென்னையில் தொடங்குகிறது.

காட்சியமைப்பு, கதைக் களம் என அனைத்திலும் புதுமையைக் கொண்டு வரவுள்ள இந்தப் படம் கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் நம்புகிறது படக் குழு.