ஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..!

ஓலைச் சுவடியின் பின்னணியில் உருவாகியுள்ள ‘கள்ளத்தனம்’ திரைப்படம்..!

கண்ணன் கிரியேசன்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.தங்கவேலு தயாரித்திருக்கும்  படம் ‘கள்ளத்தனம்.’

இந்தப் படத்தில் யுகன், வினோ இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக சொப்னா, நகினா இருவரும் நடித்துள்ளனர். மற்றும் மணிகண்ணன், முல்லை, அம்மு மார்டின், அல்வா வாசு, கோவை செந்தில், கிச்சி மார்டின் இவர்களுடன் ஏராளமான கூத்துப்பட்டறையைச் சேர்ந்த நடிகர்களும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எடிசன் M.S.அமர்நாத், இசை – ரவிகிரண், படத் தொகுப்பு – லட்சுமணன், நடன இயக்கம்  – ராஜு, தயாரிப்பு –   K.தங்கவேலு, இணை தயாரிப்பு – T.R.கார்த்திக் தங்கவேலு, கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – C.தண்டபாணி.

கள்ளத்தனண் படம் பற்றி இயக்குநர் C.தண்டபாணி பேசும்போது, “ஹீரோ கிராமத்தில் வேளாண்மை படிப்பு படித்துவிட்டு அங்குள்ள விவசாய மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு மண் ஆராய்ச்சி செய்து வருகிறார்.

அந்த சமயத்தில் ஊரில் வில்லன் பல வகைகளில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறான். எதிர்பாராவிதமாக ஹீரோவின் வீட்டில் புதையல் சம்மந்தமாக ஒரு ஓலைச் சுவடி இருப்பதும் அதில் பல ரகசியங்கள் அடங்கி இருப்பதை எப்படியோ தெரிந்து கொண்டு  வில்லன் அந்த ஓலைச் சுவடியை கைப்பற்ற நினைக்கிறான். 

இதனால் நாயகனுக்கும் வில்லன் கும்பலுக்கும் சண்டை நடக்கிறது. இறுதியில் ஓலைச்சுவடியை வில்லன் கைப்பற்றினானா இல்லை.. நாயகன் அதை தடுத்தாரா.. புதையல் யாருக்கு கிடைத்தது… என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு  செங்கம் சாத்தனூர், செஞ்சி, வேலூர் போன்ற இடங்களில் நடைபெற்றது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது…” என்றார் இயக்குநர் C.தண்டபாணி.

Our Score