full screen background image

ஆஸ்திரேலியா திரைப்பட விழாவில் ‘கள்ளப்படம்’ திரையிடப்படுகிறது..!

ஆஸ்திரேலியா திரைப்பட விழாவில் ‘கள்ளப்படம்’ திரையிடப்படுகிறது..!

ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை போட்டிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. சிறந்த அணிகளின் அணி வகுப்பாய் போட்டிகள் நடைபெற்று வரும் அதே வேளையில், தமிழ் சினிமா கொண்டாடக் கூடிய ஒரு நிகழ்வும் அதே ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.  

இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய வடிவேல் இயக்கியுள்ள ‘கள்ளப்படம்’ என்ற தமிழ்த் திரைப்படம், ஆஸ்திரேலியாவில் வரும் ஜூலை-2-ம் தேதி முதல் 12-ம் தேதிவரையிலும் நடைபெறவிருக்கும் ‘ரேவலஷன் பெர்த் சர்வதேச திரைப்பட விழா’  மற்றும் வரும் செப்டம்பர்-11-ம் தேதி  முதல் 20-ம் தேதிவரையிலும் நடைபெறவுள்ள ‘மெல்போர்ன் அன்டர்கிரவுண்ட் திரைப்பட விழா’ ஆகிய விழாக்களில்  திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

“நான்கு இளைஞர்கள் அவர்களது முதல் பட வாய்ப்புக்காக சந்திக்கும் விஷயங்களின் கோர்வையே இப்படம். இதுவொரு கமர்ஷியல் படம் என்றாலும், இதன் கதை சிறப்பானது என்கிற நம்பிக்கையில் திரைப்பட விழா ரசிகர்களைக் நிச்சயம் இந்தப் படம் கவரும் என்கிற நம்பிக்கையில்தான் போட்டிக்கு அனுப்பினோம். முதல் முயற்சியிலேயே அது வெற்றி கண்டுள்ளது.

இத்திரைப்பட விழாக்களில் வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பட்டியலில் எங்களது ‘கள்ளப்படம்’ தேர்வாகியுள்ளது. எங்களது ‘கள்ளப் படம்’ திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பேயே சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது எங்களுக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது…“ என பெருமிதத்துடன் கூறினார் புதுமுக இயக்குனர் வடிவேல்.

Our Score