மார்க்கெட் இழந்த நடிகையாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா..!

மார்க்கெட் இழந்த நடிகையாக நடித்திருக்கும் லட்சுமி பிரியா..!

திரையுலகத்தில் கதாநாயகிகள் சில வருடங்களே நிற்கின்றனர். அவர்கள் புகழின் உச்சியில் இருக்கும்போது ஊடகம் மற்றும் ரசிகர்கள் என அனைவரது பார்வையும் அவர்களை சுற்றியே இருக்கும்.

அவர்களே  காலப்போக்கில்  வாய்ப்பில்லாமல் ஒதுங்கியிருக்கும்பொழுது ஒருவரும் அவர்களை திரும்பி பார்ப்பதில்லை. அத்தகைய தருணத்தில் அவர்கள் அந்த புகழை திரும்பி அடைவதில் பெரும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

_MG_9478

‘கள்ளப்படம்’ திரைப்படத்தில் அப்படி ஒரு நாயகி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ‘சுட்டகதை’ ஹீரோயின் லட்சுமி ப்ரியா.   

லட்சுமி பிரியாவை இந்தப் படத்தில் நடிக்க வைத்தது பற்றி பேசிய அறிமுக இயக்குநர் ஜெ.வடிவேல், “லட்சுமி ப்ரியா மிக நேர்த்தியான நடிகை. இப்படத்தில் லீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். முழுக்க, முழுக்க நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதாப்பாத்திரம்  இது.

இதனை லட்சுமி ப்ரியா செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். நான் நினைத்தது போலவே லட்சுமி ப்ரியா இந்த கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தினார். இந்தக் கதாப்பாத்திரம் படத்தில் தன் சூழ்நிலையை மாற்ற பல தைரியமான முடிவுகளை மேற்கொள்ளும்.. அது என்ன என்பதுதான் படத்தின் முக்கிய விஷயம்…” என்றார்.

_MG_9620

“வடிவேல் சார் இந்தக் கதாப்பாத்திரத்தைப் பற்றி என்னிடம் கூறும்பொழுதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நடிப்பதற்கு வாய்ப்புள்ள ஒரு கதாப்பாத்திரம். இந்தக் கதாப்பாத்திரம் இல்லாமல் கதையில்லை என்றளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல். எனக்கு நந்திதா தாஸ் அவர்களை போல் தைரியமான  கதாப்பாத்திரங்களில் நடிக்க பிடிக்கும். இந்தக் ‘கள்ளப்படத்தில்’  லீனா கதாப்பாத்திரம் அத்தகைய ஒரு தைரியமான  பெண் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது…” என்கிறார் லட்சுமி ப்ரியா. 

Our Score