full screen background image

வித்தியாசமான போலீஸ்காரராக நடித்திருக்கும் வெங்கட் பிரபு..!

வித்தியாசமான போலீஸ்காரராக நடித்திருக்கும் வெங்கட் பிரபு..!

Big Print Pictures மற்றும் Spicy Cool Impression ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘களவு.’

கலையரசன் மற்றும் கருணாகரன் என்ற இரண்டு திறமையான கலைஞர்கள் இணைந்து நடிக்கும் இந்த ‘களவு’  திரைப்படத்தில், இவர்களோடு பிரபல இயக்குநரான வெங்கட் பிரபுவும் மிக, மிக வித்தியாசமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.

“கொஞ்சம்கூட  சினிமாத்தனமே இல்லாத ஒரு போலீஸ்காரரை இந்தப் படத்தில் காட்டியிருக்கிறேன்.. வெங்கட் பிரபு சார் அந்த வேடத்துக்கு முற்றிலும் பொருந்தி உள்ளார். தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.  இந்தப் படத்தில் அபிராமி ஐயர் மற்றும் சின்னி ஜெயந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் ரசிகர்களின் இதயத்தை நிச்சயம் கவரும். அடுத்த தலைமுறைக்கான இயக்குநர்கள் வரிசையில் என் பெயரும் இடம்  பிடிக்க இந்த ‘களவு’ கை கொடுக்கும்…” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் அறிமுக இயக்குநரான முரளி கார்த்திக்.

Our Score