பெயரிலேயே வித்தியாசத்தை அடக்கியிருக்கும் இந்த ‘கைப்பேசி காதல்’ திரைப்படத்தை த.சக்திவேல் தயாரிக்கிறார். இதில் கிரண், அர்பிதா, தர்ஷன், மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி இவர்களுடன் நடிகர் கிஷோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – ராகேஷ் பி.திலக், இசை – விஜய்கிருஷ்ணா, தயாரிப்பு நிர்வாகம் – சிவக்குமார், மக்கள் தொடர்பு – பெரு.துளசி பழனிவேல், எழுத்து, இயக்கம் – திம்மம்பள்ளி சந்த்ரா.
படம் பற்றிப் பேசிய இயக்குநர், “இந்த ‘கைபேசி காதல்’ திரைப்படத்தின் கதை முற்றிலும் மாறுபட்டது. ஹீரோவின் வாழ்க்கையில் முக்கிய பங்கெடுப்பது அவனது கைப்பேசிதான். அவனது வாழ்க்கையின்சந்தோஷம், துக்கம் அனைத்தையும் அதுவே தீர்மானிக்கிறது. அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அவனது செல்போனே தீர்மானிக்கிறது. அதனால் அவனுக்கு தனது செல்போன் மீதே காதல் வந்துவிடுகிறது.
அதன் பிறகு அவனது வாழ்க்கையில் ஏற்படும் சில செயல்களால் விபரீதமான முடிவுகள் ஏற்படுகின்றன. இப்படியொரு வித்தியாசமான கதையம்சத்துடன் வரவிருக்கும் படம்தான் இந்த கைப்பேசி காதல்.. விரைவில் படம் வெளிவர இருக்கிறது..” என்றார்.









