full screen background image

வடிவேலுவுக்கு ஜோடியானார் சதா..!

வடிவேலுவுக்கு ஜோடியானார் சதா..!

‘வைகைப் புயல்’ வடிவேலு, இயக்குனர் யுவராஜ் தயாளன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் எலி.. முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

1960-களின் பின்னணியில் பிரம்மாண்ட செலவில் உருவாகிவரும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி.சதிஷ்குமார் தயாரிக்கிறார்.

கடந்த பிப்ரவரி 5-ம் தேதி சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இரவு பகலாக இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பின்னி மில் வளாகத்தில் அமைக்கப் பெற்ற நட்சத்திர வீடு, பழமையான வீடுகள், பிரமாண்டமான வீடுகளின் உள்கட்டமைப்புகள், வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15-க்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான அரங்குகள் கோடிக்கணக்கான செலவில் கலை இயக்குனர் தோட்டாதரணியால் அமைக்கப்பட்டு, அவற்றில் படத்தின் வசனக் காட்சிகள், சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

மேலும் பல கோடி ருபாய் செலவில் நடன வீடு செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் 15 நாட்களுக்கும் மேலாக, புகழ் பெற்ற மும்பை நடனக் கலைஞர்கள் ஆட, பழம் பெரும் நடன இயக்குனர் தாரா அவர்களின் நடன அமைப்பில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

‘ஜெயம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகி, ஷங்கரின் ‘அந்நியன்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த நடிகை சதா இந்தப் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியானது தமிழ்த் திரையுலகத்தினரை கொஞ்சம் திடுக்கிட வைத்துள்ளது.

இந்தப் படத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாபாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்க சம்மதித்தார் நடிகை சதா. கவர்ச்சியிலும், காமெடியிலும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார். சதாவின் நகைச்சுவை நடிப்பு அவருக்கே புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது.

இந்தப் படத்தில் இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. பூனைகள் துரத்தும்போது எலி எப்படி சமாலிக்குமோ, அதேபோன்று சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியில், வைகைப்புயல் வடிவேலு எலியாக தனது நடிப்பில் பிரம்மாண்டமான சண்டை காட்சியில்கூட தனது டிரேட் மார்க் நகைச்சுவையால் அசத்தியிருக்கிறார்.

தொடர்ந்து படப்பிடிப்பில் இருக்கும் ‘எலி’ திரைப்படம் ஏப்ரல் இறுதியில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று மே மாதம் திரைக்கு வரவிருக்கிறது. குழந்தைகள், பெண்கள் என அனைவரும் பார்க்கும்வண்ணம் நகைச்சுவைக்கு முதலிடம் தந்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் 2015-ம் ஆண்டின் சூப்பர்ஹிட் படமாகும்..

நடிகர்கள் :

‘வைகை புயல்’ வடிவேலு
சதா
‘கஜினி வில்லன்’ பிரதிப் ராவத்
பெசன்ட் ரவி
‘மகாநதி’ சங்கர்
சந்தானபாரதி
பாவா லட்சுமணன்
போஸ் வெங்கட்
பூச்சி முருகன்
ராஜ்கபூர்
வெங்கல் ராவ்
கிருஷணமூர்த்தி

தொழில் நுட்ப கலைஞர்கள் :

கதை, திரைக்கதை வசனம் இயக்கம் – யுவராஜ் தயாளன்
இசை – வித்யாசாகர்
ஓளிப்பதிவு – பால் லிவிங்ஸ்டன்
படத்தொகுப்பு – VT விஜயன்
கலை – தோட்டாதரணி
பாடல்கள் – புலமைப்பித்தன். விவேகா
நடனம் – தாரா, சிவசங்கர்
சண்டை – சூப்பர் சுப்புராயன்
மேக்கப் – நேரு, பாபு
உடைகள் – முருகன்
தயாரிப்பு மேற்பார்வை – பன்னீர் செல்வம்
தயாரிப்பு நிர்வாகம் – சிவராஜ், வெங்கடேஷ்
டிசைன்ஸ் – மித்ராமீடியா
மக்கள் தொடர்பு – நிகில்
தயாரிப்பு – G சதிஷ் குமார், S அமர்நாத்

Our Score