full screen background image

புதுமுகம் தனா நாயுடு நடிக்கும் பேய்த் திரைப்படம் ‘கைலா’

புதுமுகம் தனா நாயுடு நடிக்கும் பேய்த் திரைப்படம் ‘கைலா’

பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் திரைப்படம் ‘கைலா.’

இந்த படத்தில்  தானா நாயுடு கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றும் பாஸ்கர், சீனுவாசன், பேபி கைலா, ‘அன்பாலயா’ பிரபாகரன், கெளசல்யா, செர்பியா, ஆதியா, ‘சிசர்’ மனோகர், ரஞ்சன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் –  பாஸ்கர் சீனுவாசன், ஒளிப்பதிவு –  பரணி செல்வம், இசை –  ஸ்ரவன், பாடல்கள் –  வடிவரசு, கலை இயக்கம் – மோகன மகேந்திரன், நடன இயக்கம் – எஸ்.எல்.பாலாஜி, தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.சுப்புராஜ், படத் தொகுப்பு – அசோக் சார்லஸ், மக்கள் தொடர்பு – மெளனம் ரவி.

கொடைக்கானல், சென்னை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில்  45 நாட்கள்  படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. படத்தின் கதாநாயகி தானா நாயுடு துபாயில் பிறந்து, வளர்ந்தவர். இப்போது லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார்.  இந்த படத்தில் நடிப்பதற்காக 45 நாட்கள் இந்தியா வந்து நடித்து முடித்து சென்றுள்ளார்.

படம் பற்றி இயக்குநர் பாஸ்கர் சீனுவாசன் பேசும்போது, “உலகம் முழுவதும் இன்றுவரை பேய் என்றாலே ஒருவிதமான பயம் இருக்கத்தான் செய்கிறது. தானா நாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக  நடிக்கிறார். அவர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.

kailaa movie stills

பல வருடங்களாக ‘பேய் வீடு’ என்று மக்களால் சொல்லப்பட்டு  பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டை தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்கும்போது ஒரு பெண்ணாக நிறைய பிரச்சனைகளைச் சந்திக்கிறார். அதிலிருந்து அவர் மீண்டாரா.. இல்லையா.. என்பதை திகில் படமாக உருவாக்கி இருக்கிறோம்.

படத்தில்  பேபி கைலா பங்கேற்ற ஒரு பாடல் காட்சியில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு பொம்மைகளை வாங்கி வைத்து அதையும் படமாக்கினோம்” என்றார் இயக்குநர் பாஸ்கர் சீனுவாசன். 

Our Score