full screen background image

பிருத்விராஜ்-ஷாஜி கைலாஷ் கூட்டணியில் உருவான மாஸ் ஆக்சன் படம் ‘கடுவா’

பிருத்விராஜ்-ஷாஜி கைலாஷ் கூட்டணியில் உருவான மாஸ் ஆக்சன் படம் ‘கடுவா’

மலையாள நடிகரான பிரித்விராஜின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரித்விராஜின் மனைவியான சுப்ரியா மேனன் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கடுவா’.

இந்தப் படத்தில் பிரித்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன், சித்திக், விஜயராகவன், கலாபவன் ஷாஜன், திலீப் போத்தன், அஜு வர்கீஸ், சுதேவ் நாயர், சாய்குமார், அர்ஜுன் அசோகன், சீமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்கம் – ஷாஜி கைலாஷ், தயாரிப்பு – சுப்ரியா மேனன் (பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ்) & லிஸ்டின் ஸ்டீபன் (மேஜிக் பிரேம்ஸ்), கதை – ஜினு ஆபிரகாம், இசை – ஜேக்ஸ் பிஜாய், ஒளிப்பதிவு – அபிநந்தன் ராமானுஜம், படத் தொகுப்பு – சமீர் முகமது, தயாரிப்பு வடிவமைப்பு – மோகன்தாஸ், வசனம் – ஆர்.பி.பாலா, பாடல்கள் – சாமிஜி, ஆர்.பி.பாலா, ஒலிப்பதிவு – அருண் குமார், ஒலிப்பதிவு ஸ்டுடியோ – ஆர்.பி.ஸ்டுடியோ, ஆடை வடிவமைப்பு – ஸ்டஃபி சேவியர், சமீரா சனீஸ், சண்டை பயிற்சி இயக்கம் – கனல் கண்ணன் & மாபியா சசி, தயாரிப்பு நிர்வாகம் – மனோஜ்.என், துணை தயாரிப்பாளர் – சந்தோஷ் கிருஷ்ணன், நிர்வாக தயாரிப்பாளர் – நவீன் பி.தாமஸ், நிர்வாகம் மற்றும் விநியோக தலைமை – பபின் பாபு, தயாரிப்பு மேற்பார்வை – அகில் யசோதரன், முதன்மை துணை இயக்குநர் – மனீஷ் பார்கவன், தயாரிப்பு உறுதுணை – சஞ்சு.ஜே., ஒப்பனை – ஷாஜி கட்டக்கடா, புகைப்படங்கள் – சைனத் சேவியர், வி.எஃப்.எக்ஸ். – கோக்கனட் பஞ்ச், விளம்பர வடிவமைப்பு – ஆனந்த் ராஜேந்திரன், புரமோஷன் ஆலோசகர் – விபின் குமார், மார்க்கெட்டிங் – போபக்சியோ, பத்திரிகை தொடர்பு – ரியாஸ் கே.அஹமத்.

வரும் ஜூலை 7-ம் தேதி இந்தப் படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு சென்னையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக் குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி, நடிகர்கள் வி.டி.வி. கணேஷ், ஆர்யா, ஜீவா, தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ‘கோபுரம் பிலிம்ஸ்’ அன்புச்செழியன், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திருப்பதி பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய படத்தின் நாயகனான நடிகர் பிரித்விராஜ், “மலையாள திரையுலகில் தொடர்ந்து புதுப்புது கதையம்சத்துடன் படங்கள் வெளியாகி வருகின்றன. அதே சமயம் மாஸ் ஆக்சன் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. மலையாளத்தில் இப்படி ஒரு மாஸ் ஆக்சன் படம் உருவாகாதா என ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கேகூட அந்த எண்ணம் தோன்றியது. அதன் விளைவாகத்தான் இந்த ‘கடுவா’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு  முன்பே இந்தப் படம் தொடங்கப்பட்டாலும் கொரோனா தாக்கம், வெள்ள பாதிப்பு என பலவிதமான இடர்பாடுகளை கடந்துதான் இந்த இடத்திற்கு வந்துள்ளது. நிச்சயம் ரசிகர்கள் தியேட்டரில் விசில் அடித்து ரசித்துப் பார்க்கும் ஒரு படமாக இது இருக்கும்” என்றார்.

இதைத் தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய பிரித்விராஜ், “பான் இந்திய படங்கள், ஓவர்சீஸ் உரிமை, மாறிவரும் ஜானர் என பல விஷயங்கள் குறித்து பதிலளித்தார். அதைத் தொடர்ந்து பல யூ டியூப் சேனல்களுக்கும் பிரத்தியோக பேட்டி அளித்தார் பிரித்விராஜ்.

இந்தப் படம் பல வருடங்களுக்கு முன் பிரபலமாக இருந்த, தற்போதும் உயிரோடு இருக்க கூடிய கடுவாகுன்னால் குருவச்சன் ஜோஸ் என்பவரை பற்றிய கதையாக உருவாகி இருக்கிறது.

பிரித்விராஜ் முதல்முறையாக இயக்கிய ‘லூசிபர்’ படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய் இந்த படத்தில் மீண்டும் பிரித்விராஜ் உடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து இயக்குநர் ஷாஜி கைலாஷும், பிரித்விராஜும் இணைந்து உருவாகியுள்ள படம் என்பதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘கடுவா’ திரைப்படம்.

Our Score