‘மனு நீதி’, ‘காசு இருக்கணும்’, ‘எங்க ராசி நல்ல ராசி’ போன்ற பல படங்களை தயாரித்த ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் ‘காதலி காணவில்லை’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருகிறது.
இதில் கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஹார்திகா நடிக்கிறார். மற்றும் சோப்ராஜ், பத்மா வசந்தி உட்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – தயாள் ஓஷோ
பாடல்கள் – இளையகம்பன், அண்ணாமலை
இசை – தேவா
கலை – சுந்தர்ராஜன்
எடிட்டிங் – தேவராஜ்
தயாரிப்பு நிர்வாகம் – ராகுல்
தயாரிப்பு – ஆர்.பி.பூரணி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி ராஜா
படம் பற்றி இயக்குனர் ரவிராஜாவிடம் கேட்டோம்.
இது ஒரு ஆக்சன் கலந்த படம். ஒரு மிகப் பெரிய தாதாவின் வாழ்கையை நாம் ரத்தமும், சத்தமுமாகத்தான் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் அதை மீறி ஒருவனது உள் மனசும் வெளிப்படும். கிஷோர் இந்த படத்தின் கதையை கேட்டவுடன் உடனே நடிக்க ஒத்துக் கொண்டார். படத்திற்காக நிறைய செலவு செய்வதுடன் ஒரு காமெடி அரசியல்வாதியின் வேடத்திலும் நடிக்கிறார் தயாரிப்பாளர் ஜி.ஆர்.
சமீபத்தில் இந்த படத்திற்காக தேவா இசையில் இளையகம்பன் எழுதிய பாடலான
“நான்தான்டா சென்னை கிங்
சும்மா நச்சுன்னு எடுப்போம் நுங்கு
ஆட்டயதான் போடுவோம் இங்கு – வால
ஆட்டுனா ஊதுவோம் சங்கு…”
என்ற பாடல் ஸ்ரீகாந்த் தேவா பாட பதிவானது. அப்பா இசையில் மகன் பாடிய இந்தப் பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று நம்புகிறோம்…” என்றார் இயக்குனர் ரவிராஜா.