“ஆனந்தி அமைதியானவர்;நிக்கி கல்ராணி ரவுடி..” – ஹீரோ ஜி.வி.பிரகாஷின் அனுபவப் பேச்சு..!

“ஆனந்தி அமைதியானவர்;நிக்கி கல்ராணி ரவுடி..” – ஹீரோ ஜி.வி.பிரகாஷின் அனுபவப் பேச்சு..!

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படம் வரும் நவம்பர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதையொட்டி படக் குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

kadavul irukkaan kumaaru movie team 

துவக்கத்தில் தயாரிப்பாளரான அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது, “அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் துவங்கி 25 வருடங்கள் ஆகின்றன. இந்த 25 வருட திரையுலக அனுபவத்தில் நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துவிட்டேன். இந்த 25-வது வருடத்தில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ திரைப்படத்தை தயாரிப்பது எனக்கு பெருமையாக உள்ளது.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் 100 சதவிகிதம் மிகச் சிறந்த நடிகர். நிக்கி கல்ராணியின் டைமிங் மற்றும் நடிப்பு மிக அருமையாக இருக்கும். ஆனந்தி குழந்தை போன்றவர். நிச்சயம் அவர் சினிமாவில் மிகப் பெரிய உயரங்களை தொட வேண்டும்.

இவர்களோடு இப்படத்தில் என்னுடைய நெருங்கிய நண்பன் பிரகாஷ்ராஜ் மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்க டப்பிங் செய்ய என எல்லாவற்றுக்கும் அவர் ஆர்வத்தோடு விமானத்தில் வந்து அவருடைய பணியை சரியாக முடித்துவிட்டு சென்றார். அவருக்கு எனது நன்றி.

இப்படத்தில் நடித்திருக்கும் ரோபோ சங்கரின் பாத்திரம் பேசப்படும். ஆர்.ஜே.பாலாஜியின் கதாபாத்திரம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். இப்படத்தில் என்னுடன் இனைந்து பணியாற்றிய சரவணனுக்கு நன்றி…” என்றார் டி.சிவா.

kik-8229

இயக்குநர் ராஜேஷ் பேசும்போது, “கடவுள் இருக்கான் குமாரு’ நல்ல கேட்ச்சிங்கான தலைப்பு. ஜி.வி.பிரகாஷின் நடிப்பை ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ திரைப்படத்தில் பார்த்துதான் இந்தக் கதையில் அவர்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நானே அவரை நேரில் சந்தித்து இப்படத்தின் கதையை கூறினேன். அவருக்கும் கதை பிடித்து போக உடனே இப்படம் துவங்கியது.

ஜி.வி.பிரகாஷ் நடித்து ‘U’ சான்றிதழ் பெற்று வெளிவரும் முதல் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். இன்றைய இளைஞர்கள் அனைவரும் தங்களை ஜி.வி.பிரகாஷ் குமாருடன் தொடர்புபடுத்தி கொள்கிறார்கள். அதுதான் அவருடைய மிகப் பெரிய பலம். இப்படமும் அவருடைய ரசிகர்களான இளைஞர்கள் மற்றும் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் ஒரு படைப்பாக இருக்கும். ஜி.வி.யின் இசையில் பாடல்கள் அனைத்தும் இன்று அனைத்து பண்பலைகளிலும் சக்கபோடு போட்டு வருகின்றன.

இப்படத்தில் நடித்துள்ள ஆர்.ஜே.பாலாஜிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர்கள் அனைவரையும் கவரும் வகையில் அவருக்கு இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் தரப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜீவா கெளரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்காக ஜி.வி.பிரகாஷ் உடன் நிக்கி கல்ராணி மற்றும் ஆனந்தி படத்தின் இரண்டு நாயகிகளும் அவருடன் இணைந்து நடனமாடியுள்ளனர்..” என்றார்.

kik-9253

நாயகன் ஜி.வி.பிரகாஷ்குமார் பேசும்போது, “ஆனந்தி மிகவும் அமைதியான பெண். நிக்கி கல்ராணி ரவுடி. இப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு மிகப் பெரிய விபத்தில் இருந்து தப்பித்தோம். நான் என்னுடைய  வாழ்நாளில் வேலை செய்த மிகச் சிறந்த டீம் இந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தின் டீம்தான். இப்படத்தை பார்த்துவிட்டு சென்சார் குழுவினர் அனைவரும் படத்தை பற்றி நல்லவிதமாக என்னிடம் கூறினார்கள். இப்படம் வருகிற வியாழன் அன்று வெளியாகுகிறது. வியாழன் எப்போதும் எனக்கு ராசியான நாள். ஆதலால் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும்..” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Our Score