full screen background image

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் கடத்தல் திரைப்படம்

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் கடத்தல் திரைப்படம்

D.நிர்மலா தேவி நல்லாசியுடன் PNP கிரியேசன்ஸ் மற்றும் பிரைம் அசோசியேட்ஸ் இணைந்து வழங்க சௌத் இண்டியன் புரடெக்ஷன்ஸ், தயாரித்துள்ள படம் ‘கடத்தல்’.

இந்தப் படத்தின் கதாநாயகனாக M.R.தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா, ரியா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சுதா, நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வாணன்,  R.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம், க.சபாபதி , சந்தோஷ், மோகன்ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராஜ்செல்வா, இசை – M.ஸ்ரீகாந்த், பாடல்கள் – பாவலர் எழில் வாணன், இலக்கியன்,  சக்தி பெருமாள். படத் தொகுப்பு – A.L.ரமேஷ், சண்டை இயக்கம் –  குங்ஃபூ சந்துரு, நடன இயக்கம் – ரோஷன் ரமணா, தயாரிப்பு மேற்பார்வை – மல்லியம்பட்டி  மாதவன். பத்திரிகை தொடர்பு –  மணவை புவன்,  நிழற் படங்கள் – தஞ்சை ரமேஷ், டிஸைன்ஸ் – விக்னேஷ் செல்வன்,  இணை தயாரிப்பு – M.R. தாமோதரன்- ரமேஷ் விஜயசேகர், தயாரிப்பு – செங்கோடன் துரைசாமி. 

‘காத்தவராயன்’, ‘காந்தர்வன்’, ‘இ.பி.கோ. 302’ போன்ற படங்களை இயக்கிய சலங்கை துரை இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

படம் பற்றி இயக்குனர் சலங்கை துரை பேசும்போது, “ஒரு முக்கியமான உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு காமெடி மற்றும் கிரைம் திரில்லர் திரைப்படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.

 

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இக்கால இளைஞர்களே எடுத்துக்காட்டு தாய், தந்தையர் எவ்வளவோ சொல்லியும் தவறான நண்பர்களுடன் சேர்ந்து தவறான செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். அப்படி தவறான நட்பால் தாயை மீறி செயல்படும் ஒரு இளைஞனின் கதை இது. இன்றைய இளைய தலைமுறையினருக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு பாடமாக இருக்கும்.

இதன் படப்பிடிப்பு குற்றாலம், தென்காசி, திருநெல்வேலி, மதுரை, ஒசூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது..” என்றார் இயக்குநர் சலங்கை துரை.

Our Score