full screen background image

ஆர்யாவி்ன் ‘கடம்பன்’ ஏப்ரல் 14-ல் ரிலீஸ்

ஆர்யாவி்ன் ‘கடம்பன்’ ஏப்ரல் 14-ல் ரிலீஸ்

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் ஆர்யாவின்  The Show people என்ற இரு  நிறுவனங்களும் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘கடம்பன்.’

இதில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக கேத்தரின் தெரஸா நடித்திருக்கிறார். மற்றும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, ராஜசிம்மன், ஒய்.ஜி.மகேந்திரன், எத்திராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – S.R.சதீஷ் குமார், இசை – யுவன்சங்கர் ராஜா, படத் தொகுப்பு – தேவ், கலை – A.R.மோகன், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், பாடல்கள் – யுகபாரதி, நடனம் – ராஜு சுந்தரம், ஷோபி, இணைத் தயாரிப்பு – B.சுரேஷ், B.ஜீவன், ஜித்தன் ரமேஷ், ஜீவா, தயாரிப்பு  – ஆர்.பி.சௌத்ரி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ராகவா.

படம் பற்றி இயக்குநர் ராகவா பேசும்போது, “காடுகளின் வளர்ச்சியே அந்த நாட்டின் வளர்ச்சி என்பார்கள். அப்படிப்பட்ட காடுகளை நாம் தெரிந்தே அழித்துக் கொண்டிருக்கிறோம். அதன் விளைவுகள் என்னென்ன என்பதை விரிவாக சொல்லும் படம்தான் இந்த ‘கடம்பன்’.

இன்றைய நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களால் நம் உயிருக்குயிரான காட்டு வளம் அழிக்கப்படுவதை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது இந்தப் படம்.

‘கடம்பன்’  இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான ஆர்யா படமாக உருவாகி உள்ளது. நாயகன் ஆர்யா,  இப்படத்திற்காக தனது உடம்பை  வருத்தி ‘கடம்பனா’கவே வாழ்ந்திருக்கிறார்.  

படம் இம்மாதம் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘மஞ்சப் பை’ படத்தை போலவே இந்த ‘கடம்பனும்’ எனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்றார்…” இயக்குநர் ராகவா.

 

Our Score