நேற்று நடைபெற்று முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான நம்ம அணியே பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
தலைவர், செயலாளர்கள், துணைத் தலைவர்கள், பொருளாளர் பதவிக்கான போட்டியில் கேயார் அணியைச் சேர்ந்த பைவ் ஸ்டார் கதிரேசன் மட்டுமே செயலாளர் பதவிக்கு வெற்றி பெற்றிருக்கிறார். மீதமிருந்த பதவிகளை விஷால் அணியினரே கைப்பற்றியுள்ளனர்.
அதேபோல் 21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களுக்கான போட்டியில் இராதாகிருஷ்ணன் அணியைச் சேர்ந்த 2 பேரும், சுயேட்சையாக களமிறங்கிய தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனும் வெற்றி பெற்றுள்ளனர். மீதமிருக்கும் 18 செயற்குழு உறுப்பினர்களும் விஷால் அணியைச் சேர்ந்தவர்கள்தான்.
புதிய நிர்வாகிகள் பட்டியல் :
தலைவர்
விஷால்
துணைத் தலைவர்கள் :
கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ்
செயலாளர் :
கே.இ. ஞானவேல்ராஜா, கதிரேசன்
பொருளாளர் :
எஸ்.ஆர்.பிரபு
21 செயற்குழு உறுப்பினர்கள் :
சுந்தர் .சி (விஷால் அணி)
பார்த்திபன் (விஷால் அணி)
பாண்டிராஜ் (விஷால் அணி)
ஆர்.வி. உதயகுமார் (விஷால் அணி)
மன்சூர் அலிகான் (விஷால் அணி)
எஸ்.எஸ். துரைராஜ் (விஷால் அணி)
ஆர்.கே. சுரேஷ் (விஷால் அணி)
ஆர்யா (விஷால் அணி)
எஸ். ராமச்சந்திரன் (விஷால் அணி)
ஜெமினி ராகவா (விஷால் அணி)
அபினேஷ் இளங்கோவன் (விஷால் அணி)
ஏ.எல். உதயா (விஷால் அணி)
எம். கஃபார் (விஷால் அணி)
பிரவீன்காந்த் (விஷால் அணி)
மனோஜ்குமார் (விஷால் அணி)
பி.எல். தேனப்பன் (சுயேட்சை)
எஸ்.வி. தங்கராஜ் (விஷால் அணி)
கே. பாலு (இராதாகிருஷ்ணன் அணி)
எம்.எஸ். அன்பு (விஷால் அணி)
எஸ்.எஸ். குமரன் (விஷால் அணி)
டி.ஜி. தியாகராஜன் – (இராதாகிருஷ்ணன் அணி)
வாக்குகள் விபரம்
தலைவர் பதவி :
விஷால் – 476
ராதாகிருஷ்ணன் – 332
கேயார் – 224
துணைத் தலைவர்கள் பதவி :
பிரகாஷ் ராஜ் – 408
கெளதம் வாசுதேவ் மேனன் – 357
கே.ராஜன் – 269
சுரேஷ் காமாட்சி -191
ஏ.எம்.ரத்னம் – 294
பி.டி.செல்வகுமார் -216
கவுரவச் செயலாளர்கள் பதவி :
கே.இ.ஞானவேல்ராஜா – 373
கதிரேசன் – 415
மிஷ்கின் -242
ஏ.எல்.அழகப்பன் – 161
சிவசக்தி பாண்டியன் – 206
ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் – 237
பொருளாளர் பதவி :
எஸ்.ஆர்.பிரபு – 394
விஜயமுரளி – 212
எஸ்.ஏ.சந்திரசேகர் – 326