ரஜினியின் ‘கபாலி’ ஜூலை 1-ம் தேதி ரிலீஸ்

ரஜினியின் ‘கபாலி’ ஜூலை 1-ம் தேதி ரிலீஸ்

ரஜினியின் ‘கபா’லி திரைப்படம் வரும் ஜூலை 1-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்..

கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இதில் ரஜினி மலேசியாவில் வாழும் ஒரு பெரிய டான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு –  முரளி, படத் தொகுப்பு – பிரவீன் கே.எல். ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் இது,

சமீபத்தில் வெளியான கபாலியின் டீஸர் இந்திய அளவில், உலக அளவில் பல சாதனைகளைப் படைத்து இன்னும் மேலே போய்க் கொண்டிருக்கிறது.

இப்படியொரு எதிர்பார்ப்பை ஏற்றிவிற்றிருக்கும் ‘கபாலி’ திரைப்படம், வரும் ஜூலை 1-ம் உலகமெங்கும் வெளியாகும் என்று அறவித்திருக்கிறார்கள்.

வரும் 19-ம் தேதியான தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளைக் கடந்து, ஒட்டு மொத்த தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அடுத்த பரபரப்பு நாள் ஜூலை 1-ம் தேதியாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்..!

Our Score