full screen background image

‘கபாலி’ ஜூலை 22-ம் தேதி ரிலீஸ்..!

‘கபாலி’ ஜூலை 22-ம் தேதி ரிலீஸ்..!

தெ்ன்னக சினிமாவில் இப்போது அனைவரின் பார்வையும் வரும் ஜூலை 22-ம் தேதியை நோக்கி திரும்பியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் ‘கபாலி’ திரைப்படம் ஜூலை 22-ம் தேதி ரிலீஸாகவிருப்பதாக அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதே இதற்குக் காரணம்.

அதோடு இன்றுதான் ‘கபாலி’ படம் சென்சார் ஆகியுள்ளது. ‘கபாலி’ படத்தை சென்சார் குழுவினர் இன்று பார்க்கிறார்கள் என்ற செய்தியை வெளியிட்ட படத் தயாரிப்பு குழுவினர் படம் எங்கே சென்சாருக்காக திரையிடப்படுகிறது என்பதை மட்டும் பரம ரகசியமாக வைத்திருந்து கடைசியாகத்தான் வெளியிட்டார்கள்.

thanu-kabali-censor-tweet

‘பாப்டா பயிற்சிக் கல்லூரி’யில் இருக்கும் ஒரு சிறிய அரங்கத்தில்தான் ‘கபாலி’ படம் சென்சார் அதிகாரிகளுக்குக் காட்டப்பட்டுள்ளது. இதுவே திரையுலகில் பலருக்கும் இனிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. படம் 152 நிமிடம் ஓடுகிறதாம். படத்திற்கு வரி விலக்கு கோரி விண்ணப்பித்திருப்பதால் இதற்காக நாளை மறுநாள் வரிவிலக்குக் குழுவினர் ‘கபாலி’ படத்தைப் பார்க்கவுள்ளதாகத் தெரிகிறது.

kabali-july22 release poster

இந்த நிலையில் சென்சார் சர்டிபிகேட்டை வெளியிட்ட கையோடு வரும் ஜூலை 22 வெள்ளியன்று ‘கபாலி’ படம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது என்று அதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்து பல்வேறு யூகங்கள் திரையுலகில் நேற்றில் இருந்து பரவி வந்தன.

VFX, Graphics வேலைகள் இன்னமும் முடியாததால் படம் ஆகஸ்ட் 12-க்கு தள்ளிப் போயிருக்கிறது என்றுகூட ஆருடங்கள் கணிக்கப்பட்டிருந்தன. அது அத்தனையும் பொய்யாகி, 24 மணி நேரத்தில் எல்லாமே தலைகீழ் மாற்றமாகிவிட்டது.

உண்மையில் ‘கபாலி’, சினிமா பத்திரிகாவுலகத்தை ரொம்பவே படுத்தியிருக்கிறார். 

அடுத்த எதிர்பார்ப்பு.. ‘உண்மையான கபாலி’ எப்போது சென்னை திரும்புவார் என்பதுதான்..!

Our Score