சிபிராஜ் – நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘கபடதாரி’

சிபிராஜ் – நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘கபடதாரி’

கிரியேட்டிவ்  என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வழங்கும் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் சஸ்பென்ஸ், எமோஷனல் திரில்லராக உருவாகும் படத்திற்கு இதுவரை பெயர் சூட்டப்படாமல் இருந்தது. தற்போது அப்படத்திற்கு ‘கபடதாரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

‘கபடதாரி’ என்றால் ‘பாசாங்குக்காரன்’ / ‘வேஷக்காரன்’ என்று பொருள். சிபிராஜுடன் நாசரும் நடிப்பதாக முடிவாகிவிட்ட நிலையில் சமீபத்தில் சிபிராஜ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா ஒப்பந்தமாகியிருந்தார். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.

லலிதா தனஞ்செயன் படத்தைத் தயாரிக்க, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதையையும், வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், Dr.கோ. தனஞ்செயனும் ஏற்கிறார்கள்.

Dhananjayan

கலை இயக்குநராக விதேஷ் பணியாற்ற, சில்வா சண்டை காட்சிகளை அமைக்க,  பிரவீன் கே.எல். படத் தொகுப்பு பணியைச் செய்கிறார். சைமன் கே.கிங் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து மற்றும் கு.கார்த்திக் எழுதுகிறார்கள். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். வணிகத்தை எஸ்.சரவணன் தலைமையேற்க, நிர்வாக தயாரிப்பு என்.சுப்பிரமணியன் கவனிக்கிறார்.

“சிபிராஜ் இதுவரை நடித்த ஏற்று நடித்த பாத்திரங்களைவிட இந்த படத்தில் முக்கியமான மற்றும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும்..” என்கிறார் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் Dr.கோ.தனஞ்செயன்.

இப்படத்தின் படப்பிடிப்பு  வரும் நவம்பர் 1-ம் தேதி துவங்குகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் நகரத்தில் முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று மார்ச் 2020-ல் திரைக்கு வரவிருக்கிறது.

Our Score