full screen background image

‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது

‘காவியன்’ திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகிறது

2M சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.V.சபரிஷ் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘காவியன்’.

ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இப்படத்தில்  கதையின் நாயகனாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிகர் ஷாம் நடித்திருக்கிறார். ‘மனம் கொத்திப் பறவை’ படத்தில் அறிமுகமான ஆத்மியா இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஸ்ரீதேவி குமாரும் மற்றொரு ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். முக்கியக் கதாப்பாத்திரத்தில் ஸ்ரீநாத் நடிக்க, ஹாலிவுட்டில் இருந்து ஜெஸ்டின் விகாஷ், லூக்கஸ், ஜெனிபர் ஆகிய  நடிகர்களும் படத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். 

ஒளிப்பதிவில் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் N.S. ராஜேஷ்குமார். அதிரடி இசையை ஸ்யாம் மோகன் M.M. வழங்க, படத் தொகுப்பாளராக அருண் தாமஸ் பணியாற்றியுள்ளார். கலை இயக்கத்தை T.N.கபிலனும், சண்டை இயக்கத்தை ஸ்டண்ட் சிவாவும் கவனித்துள்ளனர். மோகன்ராஜ் பாடல்களை எழுதி இருக்கிறார். சவுண்ட் டிசைனராக M.J.ராஜு, ஒப்பனையாளராக P.S.குப்புசாமி, காஸ்ட்யூம் டிசைனராக ஷேர் அலியும் பணியாற்றியுள்ளனர். 

இப்படத்தின் கதையை விறுவிறுப்பான திரைக்கதையாக்கி இயக்கி இருப்பவர் இயக்குநர் சாரதி.

‘காவியன்’ என்ற கவித்துவ தலைப்பு மட்டுமில்லாமல், ஒரு கனமான கதையோடும் களம் இறங்கியிருக்கிறது இந்தப் படக் குழு.

உலகில் அதிகம் துப்பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் முதல் இடம் அமெரிக்காவுக்குத்தான். அடிக்கடி நடைபெறும் அமெரிக்கத் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் அதிகம் பலியாவது இந்தியர்கள்தான். இப்படி ஒரு அதிர்ச்சி கலந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் இந்தக் ‘காவியன்’ படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்தியத் தொழில் நுட்பக் கலைஞர்களோடு, ஹாலிவுட் கலைஞர்களும் பங்கெடுத்துள்ள இத்திரைப்படம், வரும் அக்டோபர் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது. 

இந்தப் படத்தை SDC Picturez நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது.

Our Score