‘2M cinemas’ நிறுவனத்தின் K.V. சபரீஷ் தயாரிப்பில் பார்த்தசாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் திரைப்படம் ‘கா-வியன்’.
இந்தப் படத்தில் ஷாம் நாயகனாக நடிக்கிறார். ‘மனம் கொத்திப் பறவை’ புகழ் ஆத்மியா, ஸ்ரீதேவி குமார், இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
N.S. ராஜேஷ் குமார் ஒளிப்பதிவில், நவி சதிஷ்குமார் வசனத்தில், ஷ்யாம் மோகன் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.
சண்டைப் பயிற்சி – STUN சிவா, நடனம் – விஷ்ணு தேவா, கலை – ஜான் பிரிட்டோ, நிர்வாக தயாரிப்பு – கணேஷ் குமார்(Las Vegas) என மிக பிரம்மாண்டமான தொழில் நுட்ப கூட்டணி இப்படத்தில் இணைந்துள்ளது.
இந்தப் படம் ‘அமெரிக்காவின் சூதாட்ட நகரம்’ என்றழைக்கப்படும் ‘லாஸ் வேகாஸில்’(LAS VEGAS) 45 நாட்கள் படமாக்கப்படவுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லாஸ் வேகாஸில் நடைபெற்று வருகிறது.
லாஸ் வேகாஸில் படமாக்கப்படும் முதல் தமிழ் திரைப்படம் இதுவேயாகும்.










