தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’

தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்’

BR Talkies Corporation மற்றும் White Moon Talkies ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி மூவரும் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காவல்துறை உங்கள் நண்பன்.’

இந்தப் படத்தில் சுரேஷ் ரவி, ரவீணா ரவி, மைம் கோபி, சரத் ரவி, R.J.முன்னா, சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆதித்யா, சூர்யா இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்ய, வடிவேல் மற்றும் விமல் ராஜ் இருவரும் படத் தொகுப்பு செய்துள்ளனர். ராஜேஷ் கலை இயக்கம் செய்ய.. ஓம் பிரகாஷ் சண்டைப் பயிற்சியை இயக்கம் செய்துள்ளார். வசனத்துடன், பாடல்களையும் எழுதியுள்ளார் ஞானகரவேல். இயக்குநர் ஆர்.டி.எம். எழுதி, இயக்கியிருக்கிறார்.

நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறையுடன் அழுத்தமாக கூறும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்யவிருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் படக் குழுவினர் கலந்து கொள்ள... இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் இனிதே நடந்தேறியது.

T.Shiva

இந்நிகழ்வில்  தயாரிப்பாளர் T.சிவா பேசும்போது, “தற்போது திரையுலகம் பல முனைகளிலும் இருந்தும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சினிமா டிக்கெட் மீது ஏற்கனவே அதிகப்படியான வரிவிதிப்பு இருக்கும் நிலையில், மத்திய அரசு மேலும் 8 சதவீத TDS வரி விதித்துள்ளது. நாங்கள் இப்போது மத்திய அரசிடம் இதனை முறையிட டெல்லி செல்லவுள்ளோம். 10 சதவீத படங்களில்  மட்டுமே ஒரு வருடத்தில் பெரிய அளவில் வியாபாரம் நடக்கிறது.

தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஒரு நல்ல முயற்சியை கண்டு கொண்டு அதனை அடையாளப்படுத்தி மிகப் பெரிய அளவில் அதனை எடுத்து செல்கிறார். இது மற்ற தயாரிப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும்...” என்றார்.

IMG_0918

நடிகர் மைம் கோபி பேசும்போது, “உண்மையில் இப்படம் எனக்கு ஒரு மிகப் பெரும் அனுபவமாக இருந்தது . இயக்குநர் RDM மிக நுண்ணிய, இதயம் அதிரும் சம்பவத்தை அழுத்தமாக திரையில் தந்துள்ளார். அதில் எனக்கும் ஒரு நல்ல வாய்ப்பை தந்ததற்கு நன்றி.

நாயகன் சுரேஷ் ரவி மிக அற்புதமாக நடித்துள்ளார். அழகான ஒரு பையனாக இருந்து இரண்டாம் பகுதியில் அவர் முரட்டுத்தனமான ஆளாக மாறுவதை கண்டு நீங்கள் ஆச்சர்யமடைவீர்கள். நாயகி ரவீணா மிக அழகானதொரு நடிப்பை தந்திருக்கிறார். இப்படத்தில் அவரது நடிப்பு கண்டிப்பாக பேசப்படும். இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் பெரிய அளவில் பேசப்படும். படத்தின் க்ளைமாக்ஸ் பலரையும் அதிர வைத்து,  மனதில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்...” என்றார்.suresh raviநாயகன் சுரேஷ் ரவி பேசும்போது, “நானும் இயக்குநர் RDM இருவரும் 8 வருடங்களாக இணைந்து படம் செய்ய வேண்டும் என பேசிக் கொண்டிருந்தோம். இப்போது எங்கள் கனவு உண்மையாகியுள்ளது. எங்கள் படத்தை முன் வந்து வாங்கியதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி.

அவர் வெளியிட்ட பல படங்கள் தரமான கதையுடன், நல்ல பெயர் பெற்று வெற்றியடைந்துள்ளது. அந்த வகையில் இந்தக் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படமும் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றாது.

காவல்துறை பற்றிய நல்லவற்றை பல படங்கள் சொல்லிய நிலையில் இப்படம் அதன் அத்துறையின் வேறொரு முகத்தைக் காட்டும். எல்லாத் துறைகளிலும் நல்லதும், கெட்டதும் கலந்தே இருக்கும். இதில் நாங்கள் இதுவரையிலும் காட்டப்படாத காவல் துறையின் இன்னொரு பக்கத்தைக் காட்டியுள்ளோம்...” என்றார்.

raveena ravi

நாயகி ரவீணா ரவி பேசும்போது, “என்னை இப்படத்திற்காக தேர்ந்தெடுத்து, இப்படியொரு மிகச் சிறந்த கதாப்பாத்திரத்தைத் தந்ததற்கு  இயக்குநர் RDM அவர்களுக்கு நன்றி. திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பாரட்டை பெறுவதற்கு ஆவலுடன்  காத்திருக்கிறேன்...” என்றார்.

தயாரிப்பாளர் B. பாஸ்கரன் பேசும்போது, “முதன் முதலாக இயக்குநர் RDM என்னிடம் இந்தக் கதையைக் கூறியபோது எனக்கு பல இடங்களில் அதிர்ச்சியாக இருந்தது. சில ஆச்சர்யங்களும் இருந்தது. இந்தப் படம், பார்ப்பவர்களை பெரிய அளவில் பாதிக்கும் குறிப்பாக இறுதிக் காட்சி பெரும் அதிர்வைத் தரும்...” என்றார்.

நடிகர் R.J.முன்னா பேசும்போது, “இப்படத்தில் அழுத்தமான கதை இருக்கிறது. அதைவிட முக்கியம் என்னவெனில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக படைக்கப்பட்டுள்ளது. க்ளைமாக்ஸ் மிகவும் உணர்வுபூர்வமானதாக இருக்கும். படம் முடிந்த பிறகும் ரசிகர்கள் அதன் பாதிப்பில் இருந்து மீள மாட்டார்கள்...” என்றார்.

E.Ramdoss

நடிகர் ராம்தாஸ் பேசும்போது, “இயக்குநர் RDM  ஒரு ‘மினி மணிரத்னம்’ எனலாம். மிகவும் தெளிவான சிந்தனையுடன், குறைந்த பட்ஜெட்டில் நேர்த்தியாக, எந்தவித சமரசமுமின்றி படம் எடுக்கக் கூடியவர். இப்படத்தில் பங்கு கொண்டது மிகவும் மகிழ்ச்சி...” என்றார்.

சண்டை இயக்குநர் ஓம் பிரகாஷ் பேசும்போது, “படத்தில் நிறைய இடங்களில் மிக கடினமான சண்டைக் காட்சிகள் இருந்தன. நடிகர்கள் அனைவரும் பெரும் அர்ப்பணிப்புடன் ஒத்துழைத்துராவிட்டால் அதனை படமாக்கியிருக்கவே முடியாது. படக் குழுவின் அயராத உழைப்பில் படம் அற்புதமாக வந்திருக்கிறது...” என்றார்.

IMG_0923

இசையமைப்பாளர் ஆதித்யா பேசும்போது, “காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் எனது பயணம் மிக நீண்டதொரு அழகான பயணம். இப்படத்தில் பங்கு கொண்ட நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களின் மிகச் சிறந்த பங்களிப்பை தந்துள்ளார்கள். படத்தை ரசிகர்கள், விமர்சகர்கள்  எவ்வாறு வரவேற்பார்கள் என்பதை பார்க்க வெகு ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

G.Dhananjayan

மொத்த நிகழ்வையும் அழகாக தொகுத்து வழங்கிய தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் பேசும்போது, “இப்படத்தை தமிழின் மிக முக்கிய இயக்குநர்களுக்கு திரையிட்டு காட்டினோம். அனைவரும் படத்தை வெகுவாக ரசித்ததோடு இப்படத்தை தங்கள் படம் போல் கருதி விளம்பரப்படுத்தப் போவதாக கூறினார்கள். இப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும்...” என்றார்.