ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படத்தில் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல்…! 

ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’ படத்தில் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல்…! 

சென்ற வருடம் கேரள இளம் பெண்கள் பாடி, ஆடி வீடியோ ஆல்பமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற பாடலான  ‘ஜிமிக்கி கம்மலு’க்கு தமிழகமே நடனமாடி தலையசைத்தது.

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இப்பாடலை மீண்டும் அவர்கள் கொண்டாடும் நேரம் வந்துவிட்டது.

84 மில்லியன் ரசிகர்களை தாண்டி இன்னும் பலர் பார்த்து  ரசித்துக் கொண்டிருக்கும்  புகழ் பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ மலையாள  பாடலின்  உரிமையை சத்யம் ஆடியோஸ் நிறுவனத்திடமிருந்து பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் முறைப்படி பெற்றுள்ளார்.

ஜி.தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன், விக்ரம்குமார் ஆகியோர் இணைந்து பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள ‘காற்றின் மொழி’ திரைப்படத்தில் இந்த ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் இடம் பெறவிருப்பது இந்தப் படத்திற்கே கிடைத்த மிகப் பெரிய வரமாகும்.

சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா ஆகியோர் இணைந்து இப்பாடலுக்கு நடனமாடினர்.

IMG_2427

ஏற்கனவே நாயகி ஜோதிகாவுக்கு கேரளாவில் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இதோடு சேர்த்து ‘ஜிமிக்கி கம்மலும்’ வரும்போது அதை கேரள ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 

விதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு நடிகர் சிம்புவும் இப்படத்தில் கெளரவ வேடமேற்று நடித்துள்ளார். 

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தை சேர்ந்த A.H.காஷிஃப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

நாயகி ஜோதிகா மற்றும் படக் குழுவினர் இப்படத்தை வேகமாகவும், சிறப்பாகவும் முடித்து தந்துள்ளனர். 

இப்படத்தின் பாடல் உரிமையை லஹரி நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீடு பற்றிய தகவல் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும். அக்டோபர் 18-ம் தேதியன்று படத்தை வெளியிட படக் குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

Our Score