‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ இன்று துவங்கியது..!

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ இன்று துவங்கியது..!

செவன் ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் லலித்குமாரும், ரவுடி பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம்.

இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மூவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தின் வெற்றிக்கு இப்பொழுதே உத்திரவாதம் தருவதுபோல படத்தின் இசைப் பணியை இசையமைப்பாளர் அனிருத் துவங்கியிருக்கிறார்.

இளைஞர்களை ஈர்க்கும் பக்கா எண்டர்டெய்ன்மெண்ட் சினிமாக்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று காலை பூஜையோடு துவங்கியது.

முதல் நாள் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.பெரிய பட்ஜெட்டில் ஸ்ட்ராங் எண்டெர்மெயிண்ட் விஷயங்களோடு தயாராகும் இப்படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

Our Score